Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்டில் இந்தியா ஆமை வேக பேட்டிங்.. மாங்கு மாங்கு என பௌலிங் போட்டு சோர்ந்த ஆஸி. வீரர்கள்

மெல்போர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியா மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி அல்லது ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கிறது.

மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மாயன்க் அகர்வால் இந்த போட்டியில் இந்தியா சார்பாக அறிமுகம் ஆனார்.

ஹனுமா பொறுமையான ஆட்டம்

ஹனுமா பொறுமையான ஆட்டம்

ஹனுமா விஹாரி - மாயன்க் அகர்வால் ஜோடி இந்திய அணிக்கு துவக்கம் அளித்தனர். ஹனுமா மிக நிதானமாக ஆடி வந்தார். 66 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹனுமா, கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மாயன்க் அரைசதம் அடித்தார்

மாயன்க் அரைசதம் அடித்தார்

அடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த மாயன்க் அகர்வால், அசத்தலாக ஆடி அரைசதம் அடித்தார் 76 ரன்கள் எடுத்த அவர் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் தன் பேட்டிங்கில் 8 ஃபோர் மற்றும் 1 சிக்ஸ் அடித்து இருந்தார்.

கோலி - புஜாரா ஜோடி

கோலி - புஜாரா ஜோடி

அடுத்து கோலி - புஜாரா ஜோடி சேர்ந்து பொறுமையாக ரன் சேர்த்தனர். அரைசதம் அடித்த புஜாரா 68 ரன்களுடனும், அரைசதத்தை நெருங்கிய கோலி 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.

215 ரன்கள் எடுத்த இந்தியா

215 ரன்கள் எடுத்த இந்தியா

மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 89 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்கள் இழந்து இருக்கிறது. எந்த இந்திய வீரரும் அதிரடியாக ரன் சேர்க்க முற்படவில்லை. அதனால் ரன் ரேட் ஓவருக்கு 2.41 என்ற அளவிலேயே இருந்தது.

25 மெய்டன் ஓவர்கள்

25 மெய்டன் ஓவர்கள்

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் மட்டுமே 2 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். ஐந்து பந்துவீச்சாளர்களும் சேர்த்து மொத்தம் 25 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளனர். அந்த அளவிற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சோதித்தனர்.

Story first published: Wednesday, December 26, 2018, 15:17 [IST]
Other articles published on Dec 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+