IND vs AUS: சரித்திரம்.. உலக சாதனை படைத்த மெல்போர்ன் கிரிக்கெட் போட்டி.. 3.51 லட்சம் பார்வையாளர்கள்
மெல்போர்ன்: உலகிலேயே அதிக பார்வையாளர்கள் மைதானத்திற்கு வந்து பார்த்த இரண்டாவது டெஸ்ட் போட்டி என்ற பெருமையை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் 1936 - 37இல் நிகழ்த்தப்பட்ட சாதனையை இந்தப் போட்டி முறியடித்து இருக்கிறது.
1936-37 சீசனில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை 3,50,534 பேர் மைதானத்திற்கு வந்து பார்வையிட்டு இருந்தனர். அதுவே உலக அளவில் அதிக நேரடி பார்வையாளர்களை கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியாக இருந்தது. ஆஸ்திரேலிய அளவில் அதுவே அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டியாக இருந்தது.

உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. டிசம்பர் 26 அன்று துவங்கியதால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாகவும் இது அமைந்தது. விடுமுறை நாட்களில் நடக்கும் போட்டி என்பதால் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் நேரில் வந்து இந்த போட்டியை பார்வையிட்டனர்.
இந்திய ரசிகர்களும் பெருமளவில் இந்தப் போட்டியை காண நேரில் வந்தனர். இதற்கு முன் பல பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று இருந்தன. இரண்டாவது நாமே அந்த வரிசையில் இந்தப் போட்டி இணைந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த நான்காவது டெஸ்ட் போட்டியை முதல் நாளன்று 87,242 ரசிகர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். இரண்டாம் நாள் அன்று 85,147 ரசிகர்கள் பார்வையிட்டனர். மூன்றாவது நாளன்று 83,073 பேர் இந்த போட்டியை நேரில் பார்த்தனர்.
நான்காவது நாள் அன்று 43,867 ரசிகர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். ஐந்தாவது நாள் அன்று 51,000-க்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதை அடுத்து இதுவே ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் நேரில் வந்த பார்த்த அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கையாக அமைந்தது.
மேலும், உலக அளவில் அதிக ரசிகர்களை பார்வையாளர்களாக பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இடத்தை பெற்றது. 1999 ஆம் ஆண்டு கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை 4,65,000 ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர். அதுவே உலக அளவில் அதிக நேரடி பார்வையாளர்களை பெற்ற கிரிக்கெட் போட்டி ஆகும்.


Click it and Unblock the Notifications