Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS 4வது டெஸ்டிலும் மழை பெய்யுமா? மெல்போர்ன் வானினலை நிலவரம் என்ன? போட்டி எனன ஆகும்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டிசம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை மெல்போர்னில் தொடங்குகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் இம்முறையும் மழை காப்பாற்றுமா என எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பிபிசியின் வானிலை அறிக்கை படி, வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலை 28 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வெயில் மற்றும் மிதமான காற்று வீசும். இருப்பினும், உணரப்படும். வெப்பத்தின் தாக்கம் மிதமான அளவு இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் முதல் நாளுக்கான டிக்கெட்டை வாங்கியுள்ள 90 ஆயிரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் நாள் தெளிவான வானம் இருந்தாலும், மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, மழை பெய்ய 10 முதல் 72 சதவீத வாய்ப்பு உள்ளது, இது மெல்போர்னில் இரண்டாம் நாள் விளையாட்டை பாதிக்கலாம்.கபாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டது. திட்டமிடப்பட்ட 450 ஓவர்களில் (நாளொன்றுக்கு 90), வானிலை இடையூறு காரணமாக வெறும் 218.1 ஓவர்களே வீசப்பட்டன.இதனால், இந்தப் போட்டியில் நிச்சயம் முடிவை எதிர்பார்க்கலாம்.

மெல்போர்ன் ஆடுகளம் இந்தியாவுக்கு சாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த வேண்டும். பெர்த் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது போல், பந்து பழையதாக மாறிய பிறகு ரன் சேர்க்க வேண்டும். இதனியே இந்த தொடர் தொடங்கும் முன்னர், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், போட்டிகளில் ஒன்று டிராவில் முடிவதில் வானிலை ஒரு பங்கை வகிக்கும் என்று எதிர்பார்த்தார்.ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என்று அவர் கணித்தார்.

எங்காவது ஒரு மோசமான வானிலை இருக்கும், எனவே நான் ஆஸ்திரேலியாவுக்கு 3-1 வெல்லும் என்று கணித்திருந்தார். தொடர் 1-1 என்ற நிலையில் இருக்கும் நிலையில், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மெல்போர்னுக்கு செல்லும் இந்தியாவுக்கு ஒரு நன்மை இருப்பதாக நம்புகிறார். இது குறித்து பேசிய அவர், நான் நினைக்கிறேன் இது ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும்... பாக்சிங் டேவுக்கு 1-1 என்ற நிலையில் தொடர் வந்துள்ளது இந்தியாவுக்கு தான் சாதமகம் என்று கூறியுள்ளார்.

சாம் காண்டஸ்டாஸ் அறிமுகமாகும் நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியுக்கான தங்கள் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. நாதன் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக அவர் விளையாடுகிறார், அதேசமயம் காயமடைந்த ஜாஷ் ஹேஸ்ல்வுட் வீரரான ஸ்காட் போலேண்ட் அணியில் இணைந்துள்ளார்.நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜா, சாம் காண்டஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்ன், ஸ்டீவ் ஸ்மித், டிராவில்ஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்சல் ஸ்டார்க், நாதன் லியான் மற்றும் ஸ்காட் போலேண்ட் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

Story first published: Wednesday, December 25, 2024, 22:59 [IST]
Other articles published on Dec 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+