அடிலெய்டு: இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் வில்லனாக மாறி இருக்கிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் போது முகமது சிராஜ் பந்து வீச வந்தார். அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், போட்டியில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் பந்து வீச வந்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் பெரும் கூச்சல் எழுப்பினர்.
கடந்த போட்டியில் ட்ராவிஸ் ஹெட் உடன் நடந்த மோதல் தான் அதற்கு காரணம். இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மற்றும் முகமது சிராஜ் இடையே சிறிய மோதல் சம்பவம் நடந்தது.
ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பின் முகமது சிராஜ் அதை கொண்டாடினார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ராவிஸ் ஹெட், முகமது சிராஜ் மீது பழி போட்டார். பதிலுக்கு ட்ராவிஸ் ஹெட் பொய் சொல்வதாக கூறி இருந்தார் முகமது சிராஜ்.
இந்த விவகாரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் முடிவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இருவருக்கும் அபராதம் விதித்தது. இந்த சம்பவத்தால் முகமது சிராஜ் மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பலை கிளம்பியது.
எதிர்பார்த்தது போலவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் பந்து வீச வந்தபோது ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், சிராஜ் சில வினாடிகள் திகைத்து நின்றார். அந்த கூச்சல் சிறிது நேரமே நீடித்ததால் பரபரப்பு அடங்கியது. இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை முகமது சிராஜ் ஏதேனும் சர்ச்சையில் சிக்கினால் நிச்சயமாக அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இன்னும் அதிக வெறுப்பை கக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் வெகுவாக பாதித்தது. அதனால், சிராஜ்-க்கு எதிரான எதிர்ப்பலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.