Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்.. சச்சின், கோலி சாதனை முறியடிப்பு

மெல்போர்ன்: தற்போது நடைபெற்று வரும் 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி டெஸ்ட் தொடரில் இதுவரை ஆறு சதம் அடிக்கப்பட்டுள்ளது. ட்ராவிஸ் ஹெட் இரண்டு சதமும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டு சதமும், விராட் கோலி ஒரு சதமும், ஜெய்ஸ்வால் ஒரு சதமும் அடித்து உள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை நடந்த அனைத்து இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களிலும் சேர்த்து அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்த வீரராக இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். அவர் பத்து சதங்கள் அடித்து இருக்கிறார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அவர் 9 சதங்கள் அடித்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரும் 9 சதங்கள் எடுத்து இருக்கிறார். ரிக்கி பாண்டிங் எட்டு சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 7 சதங்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். மேத்யூ ஹெய்டன் 6 சதங்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். விவிஎஸ் லக்ஷ்மன் ஆறு சதங்கள் அடித்து ஐந்தாவது இடத்தை ஹெய்டனுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலையும் இங்கே பார்க்கலாம். ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக 11 சதங்கள் அடித்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் பார்டர் - கவாஸ்கர் ட்ராபி தொடரில் 10 சதங்கள் அடித்து இருக்கும் நிலையில், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தை மூன்று ஜாம்பவான்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கேரி சோபர்ஸ் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு எதிராக 8 சதங்களை அடித்து உள்ளனர். தற்போதைய தலைமுறை பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 28, 2024, 8:25 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+