Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு காயமா? ஆஸி. முதல் ஒருநாள் போட்டிக்கு முன் வந்த கெட்ட செய்தி! அடுத்த வாய்ப்பு யாருக்கு?

ஹைதராபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 2) நடைபெற உள்ள நிலையில், பயிற்சியில் தோனிக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் கடும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தோனியும் நீண்ட நேர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

தாக்கிய பந்து

தாக்கிய பந்து

வலைப்பயிற்சியில் தோனி "த்ரோடவுன்" பந்துகளை எதிர் கொண்டார். ராகவேந்திரா என்ற இந்திய அணி உதவியாளர் த்ரோடவுன் செய்து வந்தார். ஒருமுறை வேகமாக வந்த பந்து தோனியின் வலது கையில் தாக்கியது.

காயம் பெரிதா?

காயம் பெரிதா?

இதனால், வலியில் துடித்த தோனி, பின்னர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த காயம் எத்தகையது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இது குறித்து இன்று இரவு முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

அடுத்த வாய்ப்பு யாருக்கு?

அடுத்த வாய்ப்பு யாருக்கு?

ஒருவேளை தோனி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இடத்திற்கு இரண்டு வீரர்கள் உள்ளனர். ஒருவர் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் கணக்கு

ரிஷப் பண்ட் கணக்கு

தோனி ஆட முடியாத நிலை ஏற்பட்டால், ரிஷப் பண்ட் தோனியின் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் ஏற்கனவே அணியில் சேர்க்கப்படுவார் என்ற நிலையில் இந்தியா கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை சேர்த்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ராகுல்?

ராகுல்?

ஒருவேளை ரிஷப் பண்ட்டை அணியில் களமிறக்கும் எண்ணம் இல்லை என்றால், அடுத்த வாய்ப்பு ராகுல் தான். ராகுல் உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பெரியளவில் அவர் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை. எனினும், பரிசோதனை முயற்சியாக இதை அணி நிர்வாகம் செயல்படுத்தலாம்.

தினேஷ் கார்த்திக் இல்லை

தினேஷ் கார்த்திக் இல்லை

மற்றொரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஒருநாள் போட்டிகளுக்கான உத்தேச அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனிக்கு காயம் எதுவும் ஏற்படாமல், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் முழுவதும் ஆட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

Story first published: Friday, March 1, 2019, 17:01 [IST]
Other articles published on Mar 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+