For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிராக டி20 போட்டிகள் தொடர்: இந்திய அணியில் நெக்ரா, தவண், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mathi

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகள் தொடருக்கான இந்திய அணியில் நெக்ரா, தவண், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் 1 போட்டியில் மட்டுமே அந்த அணி வென்றது.

இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி அபார வெற்றி

4 போட்டிகளில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. நாக்பூரில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

7-ந் தேதி முதல் டி20 போட்டிகள்

7-ந் தேதி முதல் டி20 போட்டிகள்

இதையடுத்து சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் வரும் 7-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தம் 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணியில் நெக்ரா, தவண்

இந்திய அணியில் நெக்ரா, தவண்

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் நெக்ரா, தவண், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள் விவரம்: கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவண், ராகுல், பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோணி, பாண்ட்யா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், நெக்ரா, அக்சர் படேல்.

Story first published: Monday, October 2, 2017, 10:46 [IST]
Other articles published on Oct 2, 2017
English summary
As Team India wrapped the series 4-1 with an emphatic seven-wicket win in the fifth ODI, the BCCI on Sunday (October 1) named the Twenty20 squad against Australia without making too many changes.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+