Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடிய விடிய கொண்டாட்டம் தான்.. உறுதியாக சொன்ன கோலி.. குஷியில் இருக்கும் இந்திய வீரர்கள்

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. முதன் முறையாக இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனால், மகிழ்ச்சிக் கடலில் இருக்கும் இந்திய வீரர்கள் இன்று இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

2018இல் இரண்டு முக்கிய வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்தது இந்தியா. அதிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4-1 என மோசமான தோல்வியை சந்தித்து மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர் இந்திய வீரர்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

இந்நிலையில், 2019இன் துவக்கத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை சந்தித்து அசத்தியுள்ளது இந்திய அணி. விராட் கோலி மட்டுமே இந்திய பேட்டிங்கை தாங்கி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடுகிறார்கள் என்ற விமர்சனத்தை இந்த டெஸ்ட் தொடர் முறியடித்துள்ளது.

பேட்ஸ்மேன்கள் அசத்தல் ஆட்டம்

பேட்ஸ்மேன்கள் அசத்தல் ஆட்டம்

துவக்க வீரர்கள் முரளி விஜய், ராகுல் தவிர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். புஜாரா, ரிஷப் பண்ட் இருவரும் இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். ரஹானே, மாயன்க் அகர்வால் இரு அரைசதங்கள் அடித்தனர். கோலி ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்தார். ஜடேஜா ஒரு அரைசதம் அடித்து இருந்தார்.

இந்திய பந்துவீச்சு அருமை

இந்திய பந்துவீச்சு அருமை

அதே போல இந்திய பந்துவீச்சு இதுவரை இல்லாத அளவு ஒரு டெஸ்ட் தொடர் முழுவதும் திருப்திகரமாக இருந்தது. எந்த போட்டியிலும் இந்திய பந்துவீச்சு மோசம் என கூறும் வகையில் அமையவில்லை. அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்களை அள்ளினர்.

இரவு முழுவதும் கொண்டாட்டம்

ஒரு முழுமையான டெஸ்ட் தொடர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய வீரர்கள் உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள். அவர்களின் கொண்டாட்டம் இன்று இரவு முழுவதும் நீடிக்கும் என கோலி உறுதிப்படுத்தினார்.

கோலி - அனுஷ்கா ஜோடி

கோலி - அனுஷ்கா ஜோடி

தொடர் வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை மைதானத்துக்கு வரவழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். வழக்கம் போல விராட் கோலி - அனுஷ்கா ஜோடி அனைவரையும் கவர்ந்தது.

Story first published: Monday, January 7, 2019, 12:39 [IST]
Other articles published on Jan 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+