IND vs AUS 1st ODI LIVE: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
மொஹாலி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் இல்லாமல் இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியுள்ளது

இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
சூர்யகுமார் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 3 ஓவர்களில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடி வருகிறது. ராகுல், ஜடேஜா களத்தில் உள்ளனர்.
43 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 40 சூர்யகுமார் 33 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். வெற்றிக்கு 42 பந்துகளில் 35 ரன்கள் தேவை.
30 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 12, இஷான் கிஷன் 15 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். வெற்றிக்கு 20 ஓவர்களில் 99 ரன்கள் தேவை.
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ரன் அவுட்டாகி நடையை கட்டினார்
இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்
17.3 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இதில் ருதுராஜ் 51 ரன்களுடனும், சுப்மன் கில் 59 ரன்களுனுடம் விளையாடி வருகின்றனர்
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் 33 ரன்களும், கில் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
4 ஒவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
35.4 ஓவரின் போது மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.
அஸ்வின் பந்துவீச்சில் மார்னஸ் லாபுஷேன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
32 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 164 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து விளையாடி வருகிறது
முகமது ஷமி பந்துவீச்சில் ஷமி அவுட்
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழப்பு
ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்ழு 98 ரன்கள் எடுத்துள்ளது
9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. வார்னர் 15 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்


Click it and Unblock the Notifications