IND vs AUS - அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் யார்? சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் 22 ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது.
உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு இந்திய அணி தங்களது கடைசி பயிற்சி களமாக இந்த தொடரை கருதுகிறது. உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலியாவும் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்தகத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து நாம் தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 71 போட்டியில் விளையாடி 3077 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது சதங்கள் அடங்கும்.
இந்தப் பட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது தற்போதைய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. இவர் 42 போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2251 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 59.23 ஆகும். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளார்.
விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2172 ரன்கள் 46 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 8 சதங்கள் அடங்கும். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக 59 போட்டியில் விளையாடி 2,164 ரன்கள் எடுத்திருக்கிறார்.இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருக்கிறார்.
இவர் 55 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி 1660 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் ,11 அரை சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின் ஒன்பது சதங்களுடன் முதலிடத்திலும் விராட் கோலி 8 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதால் இதிலும் சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications