Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS : தெளிவா தெரியுது.. பைனலில் ஜெயிக்கப் போவது இந்தியாதான்.. ஆஸ்திரேலிய ஜாம்பவான் அதிரடி

அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாதான் வெல்லும் என கூறி இருக்கிறார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன்.

அதற்கு முக்கிய காரணமாக மூன்று விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த மூன்றிலும், ஆஸ்திரேலியாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதால் இந்தியா தான் வெல்லும் என அவர் கூறி இருக்கிறார்.

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தான் ஆசிய ஒன்பது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப் போட்டி என மொத்தம் பத்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.

INDIA vs AUSTRALIA ODI World Cup FINAL 2023 : Micheal Bevan says India clear winner in final

மறுபுறம் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளிடம் மட்டுமே தோல்வியை சந்தித்தாலும், அர்த்தன் பின் ஏழு லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

எனவே, வெற்றி, தோல்வி அடிப்படையில் பார்த்தால் இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கேல் பெவன், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் அணி என தெளிவாக தெரிகிறது எனக் கூறி அதிர வைத்துள்ளார்.

தன் சொந்த நாட்டு அணியான ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி இருக்கும் அவர் ஆனாலும், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் முன்னிலையில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து மைக்கேல் பெவன் பேசியபோது, "உலகக்கோப்பை இறுதிப் போட்டியை எட்டுவது என்பது மிகப் பெரிய சாதனை. அதனை எப்போதும் செய்ய முடியாது. இப்போது இரண்டு உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அணிகள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன." என்றார்.

மேலும், "ஆஸ்திரேலிய அணியில் நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள். ஆனால், ஆஸ்திரேலியா தங்களின் பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும் என நான் நம்புகிறேன். 2023 உலகக்கோப்பையை வெல்லப் போவது இந்தியா தான் எனத் தெளிவாக தெரிகிறது. அதே சமயம், ஆஸ்திரேலியாவுக்கும் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருக்கிறது." என்றார் மைக்கேல் பெவன்.

மேலும் மைக்கேல் பெவன் கூறுகையில், "ஆஸ்திரேலியா இந்த தொடரில் மோசமான இடத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்தியா வீழ்த்தவே முடியாத அணியாக உள்ளது. அவர்கள் 2023 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்தியா தான் ஆடிய 10 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது." என்றார்.

Story first published: Saturday, November 18, 2023, 8:12 [IST]
Other articles published on Nov 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+