Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோருக்கும் நாளைக்கு ஸ்கூல் லீவு.. ரோஹித் படித்த லேடி வேளாங்கண்ணி பள்ளி அதிரடி அறிவிப்பு

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடக்க இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா படித்த பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மா மும்பையில் உள்ள "அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி ஹைஸ்கூல்" (Our Lady of Vailankanni High School) என்ற பள்ளிக் கூடத்தில் தான் சிறு வயதில் படித்தார்.

தற்போது ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்த நிலையில், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இரவு வரை பார்க்க வேண்டும் என்பதால் அடுத்த நாளான நவம்பர் 20 திங்கள் அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

INDIA vs AUSTRALIA ODI World Cup FINAL 2023 :Rohit Sharma has announced holiday

தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் ரோஹித் சர்மா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க இருப்பதால் மாணவர்கள் அந்தப் போட்டியைக் கண்டு களித்து மறுநாளும் ஓய்வு எடுக்கும் வகையில் விடுமுறை அளித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஒருவேளை இந்தியா உலகக்கோப்பை வென்றால் அதை கொண்டாடும் வகையில் முன் கூட்டியே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாங்கண்ணி பள்ளி நிர்வாகம் சார்பில் சிறுவனாக ரோஹித் சர்மா தங்கள் பள்ளியில் சேர்ந்த போது கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியான இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். தன் சுயநலம் பார்க்காமல் அணிக்காக அதிரடியாக குறைந்தது 40 ரன்கள் குவித்து அணியின் ரன் ரேட்டை முதல் சில ஓவர்களிலேயே உயர்த்தி விடுகிறார் ரோஹித் சர்மா. இறுதிப் போட்டியில் அந்த அதிரடி ஆட்டத்தையும் தாண்டி அவர் சதம் அடிக்க வேண்டும் என்பதே ரோஹித் சர்மா ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அதைத் தாண்டி அவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதும் முக்கியமான ஆசையாக உள்ளது.

Story first published: Sunday, November 19, 2023, 10:41 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+