For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2003 டூ 2023.. இதுக்கு பேரு தான் ரிப்பீட்டு.. இத்தனை ஒற்றுமைகளா.. கப்பை இந்தியா பேரில் எழுதுங்கோ!

அகமதாபாத்: 2003 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கும், 2023ஆம் ஆண்டு இறுதிப்போட்டியை எட்டியுள்ள இந்திய அணிக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து சில ஆச்சரியமான தகவல்களை பார்க்கலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் வெல்வதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த உலகக்கோப்பை பைனலில் வென்று, 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDIA vs AUSTRALIA ODI World Cup FINAL 2023: What is the Similarities between the World Cup 2023 and World Cup 2003

இந்த நிலையில் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கும், 2023ஆம் ஆண்டு நடந்து வரும் உலகக்கோப்பை தொடருக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் இந்திய அணி 2003 உலகக்கோப்பையில் இந்தியா தொடர்ந்து 8 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2003 உலக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் கில்லஸ்பி தான் முதல் 4 போட்டிகளில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக கில்லஸ்பி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஆன்டி பிக்கல் களமிறங்கி முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் 4 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தான் 3வது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்டார். அதன்பின் முகமது ஷமி களமிறங்கி என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். 3 முறை 5 விக்கெட்டுகள், அரையிறுதியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதேபோல் நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் 2003ஆம் ஆண்டு 3வது முறையாக ஆஸ்திரேலியா அணி உலக்கோப்பையை வென்றது. தற்போது இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால், இந்தியாவுக்கும் இது 3வது உலகக்கோப்பையாகும்.

இந்த இரு உலகக்கோப்பைகளுக்கு இடையிலும், இரு அணிகளுக்கும் இடையில் இத்தனை ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இடத்தில் இந்தியாவும், இந்திய அணி இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. இதனால் இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Story first published: Saturday, November 18, 2023, 9:07 [IST]
Other articles published on Nov 18, 2023
English summary
INDIA vs AUSTRALIA World Cup FINAL 2023 : More and More Similarities between India and Australia in the World Cup 2023 and World Cup 2003. Lets see what are the similarities.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+