Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய ஆஸ்திரேலிய கேப்டன்.. இந்தியா கதையை அப்பவே முடிச்சிருப்போம்.. சீண்டல் பேச்சு

அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை முதல் போட்டியிலேயே வீழ்த்தி இருக்க வேண்டியது என இறுதிப் போட்டிக்கு முன் பேசி இருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளன. முன்னதாக இந்திய அணி, நியூசிலாந்து அணியை அரை இறுதியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.

ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அரை இறுதியில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆஸ்திரேலிய அணியில் சில பலவீனங்கள் இருந்தாலும், இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். போட்டியில் வீரத்தை காட்டாமல், இப்படி நடந்தால் இந்தியாவை வீழ்த்தி இருப்போம், ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவை வீழ்த்தினோம் என பழைய கதைகளை பேசி சீண்டி இருக்கிறார் கம்மின்ஸ்.

INDIA vs AUSTRALIA : Pat Cummins says they would have beat India in first league match

உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தங்களின் முதல் போட்டியிலேயே மோதி இருந்தன. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. ஆனால், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்க வேண்டியது. ஒரே ஒரு கேட்ச்சை நாங்கள் தவறவிட்டதால் இந்தியா வென்று விட்டது என்பது போல பேசி, இந்தியாவை மட்டம் தட்டி இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

அந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து இந்தியா சேஸிங் செய்ய வந்த போது ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று இந்திய வீரர்கள் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்கள். அதன் பின் விராட் கோலி கொடுத்த கேட்ச்சை ஆஸ்திரேலியா தவறவிட்டது. பின்னர் விராட் கோலி, கே எல் ராகுல் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

அதை இப்போது இறுதிப் போட்டிக்கு முன் சுட்டிக் காட்டி இருக்கிறார் பாட் கம்மின்ஸ். அதாவது நாங்கள் சுமாராக ஆடும் அணி என்றாலும் அந்த ஒரு கேட்சை பிடித்து இருந்தால் இந்தியாவை வீழ்த்தி இருப்போம் எனக் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், "அவர்கள் உலகக்கோப்பையில் நன்றாக ஆட இருக்கிறார்கள். நாங்கள் அப்படி ஆடவில்லை. முதல் போட்டியில் நாங்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ஆனால், நாங்கள் ஒரு கேட்ச் விட்டதால் அந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டோம். இதே ஆண்டின் துவக்கத்தில் சிறந்த இந்திய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி இருக்கிறோம்" என்றார் கம்மின்ஸ்.

Story first published: Sunday, November 19, 2023, 9:05 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+