Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. தொடரில் இந்த ஏழு வீரர்களும் தங்களை நிரூபிச்சே ஆகணும்.. இல்லைனா பிரச்சனை தான்!!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் முன்னோட்டமாக நடக்க உள்ள இந்த தொடரில் சில இந்திய வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சில வீரர்கள் சொதப்பாமல் ஆட வேண்டுமே என்ற அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

முஹம்மது சிராஜ்-க்கு கிடைத்த வாய்ப்பு

முஹம்மது சிராஜ்-க்கு கிடைத்த வாய்ப்பு

முஹம்மது சிராஜ் தற்போது இவர்களுடன் போட்டி போட்டு தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பும்ரா ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வில் சென்றதால் சிராஜ் உத்தேச அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். ஷமி, புவனேஸ்வர், கலீல் ஆகியோரை தாண்டி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறுவதே சிராஜ்-க்கு பெரிய சாதனையாக இருக்கும். களமிறங்கும் வாய்ப்பு ஒரு போட்டியில் கிடைத்தால் கூட அந்த போட்டியிலேயே அதிக விக்கெட்கள் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிராஜ்.

கலீல் அஹ்மது என்ன செய்வார்?

கலீல் அஹ்மது என்ன செய்வார்?

ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்களில் கலீல் அஹ்மது சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கலீல் எந்தளவு செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸி. மண்ணில் டி20 போட்டியில் கலீல் பந்து வீசி இருந்தாலும், ஒருநாள் போட்டி சூழ்நிலையில் எப்படி பந்து வீசுகிறார் என்பதை சோதிக்க காத்திருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.

ஷமிக்கு வாய்ப்பு உண்டா?

ஷமிக்கு வாய்ப்பு உண்டா?

ஷமி டெஸ்ட் போட்டிகளில் தன் முத்திரையை ஆழமாக பதித்து விட்டார். ஆனால், ஒருநாள் அணியில் அவரை சில காலமாக எடுக்காமல் இருந்த நிலையில், மீண்டும் அவரை சோதிக்க தொடங்கியுள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் ஷமி களமிறங்குவார். ஒரு போட்டியிலாவது தன் முத்திரையை பதிக்கும் வகையில் ஷமி பந்து வீச வேண்டும்.

ஜடேஜா கதை என்ன?

ஜடேஜா கதை என்ன?

ஜடேஜா கிட்டத்தட்ட ஒருநாள் போட்டிகளில் இனி வாய்ப்பே பெற மாட்டார் என்ற நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அக்சர் பட்டேல் காயத்தால் வாய்ப்பு பெற்று அணியில் இணைந்தார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சிறப்பாகவே பந்து வீசினார். ஜடேஜா பந்துவீச்சில் கெட்டி என்பதில் சந்தேகமில்லை. அவர் பேட்டிங்கில் அணிக்கு கை கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய அம்சமாக உள்ளது. அது ஆஸ்திரேலிய தொடரில் ஜடேஜா நிரூபிக்க வேண்டும்.

அம்பதி ராயுடு உறுதியா?

அம்பதி ராயுடு உறுதியா?

அம்பதி ராயுடு இந்தியாவின் பேட்டிங்கில் பெரிய பிரச்சனையாக இருந்த நான்காவது இடத்தில் களமிறங்கி தன்னை நிரூபித்து விட்டார். உலகக்கோப்பை அணியில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி என்றாலும், ஆஸ்திரேலிய தொடரில் அவர் சொதப்பாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர் நிலை சிக்கலாக வாய்ப்புண்டு.

அல்லாடும் தினேஷ் கார்த்திக்

அல்லாடும் தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் பொறுப்பான பேட்ஸ்மேன். ஆனால், அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு என்பது வருவதும், போவதுமாகவே உள்ளது. தினேஷ் கார்த்திக் 4, 5, 6 என மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் சதம் அடிக்க வாய்ப்பு ஏற்படுவதில்லை. இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் தினேஷ் சதம் அடிக்க முயற்சிக்கலாம். அது அணியில் அவரது இடத்தை உறுதி செய்யும்.

கேதார் ஜாதவ்வும், காயமும்

கேதார் ஜாதவ்வும், காயமும்

கேதார் ஜாதவ் சுழற் பந்துவீச்சாளராகவும் கை கொடுக்கும் பேட்ஸ்மேன். இது அணிக்கு பல சமயங்களில் கை கொடுத்து உதவி உள்ளது. ஆனால், முக்கிய தொடர்களில் எல்லாம் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார் ஜாதவ். இந்த முறை இவர் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடினாலே போதும். ஆனால், காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த முறை ஜாதவ் ஏதேனும் ஒரு போட்டியில் காயத்தால் விலகினால், உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு பெறுவது மிக கடினம்.

உத்தேச இந்திய அணி

உத்தேச இந்திய அணி

இந்திய ஒருநாள் அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முஹம்மது சிராஜ், கலீல் அஹ்மது, முஹம்மது ஷமி.

Story first published: Friday, January 11, 2019, 17:57 [IST]
Other articles published on Jan 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+