For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டி எப்போது? தேதி, நேரம், சேனல், ஸ்ட்ரீமிங் விவரம்

அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிகள் மோத உள்ள பயிற்சிப் போட்டி எப்போது நடைபெற உள்ளது? அந்தப் போட்டிக்கான தேதி நேரம் மற்றும் ஒளிபரப்பு குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது இந்திய அணி. அடுத்து பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தயாராகி வருகிறது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match

ஏன் இந்த பயிற்சிப் போட்டி?

டிசம்பர் 6 அன்று அடிலெய்டு மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இது பகல் - இரவு போட்டி என்பதால் பிங்க் நிற பந்தில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிகள் இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் பயிற்சிப் போட்டி எப்போது?

இந்தப் பயிற்சிப் போட்டி நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.10 க்கு துவங்கும். ஆஸ்திரேலியா நேரப்படி இந்தப் போட்டி மாலை நேரத்தில் துவங்கி, இரவு வரை நடைபெறும். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் மணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அவர் இந்த பயிற்சிப் போட்டியில் பேட்டிங் செய்வார் என தெரிய வந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் பயிற்சிப் போட்டி ஒளிபரப்பு விவரம்:

இந்தியா - ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் பயிற்சிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஜியோ சினிமா மொபைல் ஆப் (App) மற்றும் இணையத் தளத்திலும் நேரலையில் பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி விவரம்:

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணி சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி விவரம்:

ஜாக் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சார்லி ஆண்டர்சன், மஹ்லி பியர்ட்மேன், ஸ்காட் போலண்ட், ஜாக் கிளேட்டன், ஐடன் ஓ'கானர், ஒல்லி டேவிஸ், ஜேடன் குட்வின், சாம் ஹார்பர், ஹன்னோ ஜேக்கப்ஸ், சாம் கான்ஸ்டாஸ், லாயிட் போப், மாத்யூ ரென்ஷா மற்றும் ஜெம் ரியான்

பயிற்சி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ள இந்திய அணி வீரர்கள் விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது சிராஜ், சர்ஃபராஸ் கான், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அபிமன்யு ஈஸ்வரன்.

Story first published: Wednesday, November 27, 2024, 8:29 [IST]
Other articles published on Nov 27, 2024
English summary
India vs Australia Prime Minister XI Practice test match date, time and telecast details.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+