Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி மேல் அடி.. ஆஸி. டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்!!

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

ப்ரித்வி ஷா காயத்தில் இருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பயிற்சிப் போட்டியில் ப்ரித்வி காயம்

பயிற்சிப் போட்டியில் ப்ரித்வி காயம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் பீல்டிங் செய்த போது ப்ரித்வி ஷாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.

வாய்ப்புப் பெற்ற முரளி விஜய் - ராகுல்

வாய்ப்புப் பெற்ற முரளி விஜய் - ராகுல்

ப்ரித்வி ஷா ஆடும் பட்சத்தில் முரளி விஜய் அல்லது ராகுல் இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் வாய்ப்பு பெறும் நிலை இருந்தது. ஆனால், அவரது காயத்தால், இவர்கள் இருவாறும் துவக்க வீரர்களாக அணியில் இடம் பிடித்தனர். எனினும், இருவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரி வர ஆடவில்லை.

ப்ரித்வி வருவார் என்ற ரவி சாஸ்திரி

ப்ரித்வி வருவார் என்ற ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி முதல் டெஸ்டுக்கு பின்னர் ப்ரித்வி தேறி வருவதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என வும் தெரிவித்து இருந்தார். ஆனால், அதிரடியாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ப்ரித்வி ஷா. இதில் இருந்து அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என தெரிகிறது. ஏற்கனவே, இந்திய துவக்க வீரர்கள் சரியாக ஆடாத நிலையில், ப்ரித்வியின் காயம் அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

உள்ளே வந்த மாயங்க் அகர்வால்

உள்ளே வந்த மாயங்க் அகர்வால்

ப்ரித்வி ஷா நீக்கப்பட்டுள்ள நிலையில், மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முரளி விஜய் - ராகுல் சரியாக ஆடாத நிலையில், மாயங்க் அகர்வால் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பண்டியாவும் அணியில் இணைந்துள்ளார்.

மாற்றத்திற்குப் பின் இந்திய அணி

மாற்றத்திற்குப் பின் இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், பார்த்திவ் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்திக் பண்டியா மற்றும் மாயங்க் அகர்வால்

Story first published: Tuesday, December 18, 2018, 11:25 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+