Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமை வேகத்தில் 17வது சதம் அடித்த புஜாரா.. ரசிகர்கள் பாராட்டு.. இருந்தாலும் கோலி அளவுக்கு இல்லையே!!

Recommended Video

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 17வது சதம் அடித்த புஜாரா- வீடியோ

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தன் 17வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து அசத்தியுள்ளார்.

புஜாரா இந்திய டெஸ்ட் அணியின் தூணாக மாறி வருகிறார். நிலைத்து நின்று நிதானமாக ஆடும் பாணியை கடைபிடிக்கும் புஜாரா, தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் தன் இரண்டாவது சதத்தை அடித்துள்ளார்.

17வது சதம் அடித்த புஜாரா

17வது சதம் அடித்த புஜாரா

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டின் முதல் நாளில் சதம் அடித்து கலக்கினார் புஜாரா. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சற்று தடுமாறினார். மூன்றாவது டெஸ்டில் மீண்டும் ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவரது 17வது டெஸ்ட் சதமாகும்.

அதிக பந்துகளில் 17வது சதம்

அதிக பந்துகளில் 17வது சதம்

இந்த சதத்தில் ஒரு சிறப்பு உள்ளது. இதுவே புஜாரா அதிக பந்துகள் எடுத்துக் கொண்டு அடித்த சதம். 280 பந்துகள் சந்தித்த பின்னரே சதத்தை எட்டினார் புஜாரா. இதன் சராசரி 36. மெல்போர்ன் போட்டியில் இதுவரை பேட்டிங் செய்த அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களுமே பொறுமையாகவே ஆடி வருகின்றனர்.

இதற்கு முன் அடித்த சதங்கள்

இதற்கு முன் அடித்த சதங்கள்

இதற்கு முன் புஜாரா மும்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 248 ரன்களில் சதம் அடித்து இருந்ததே அவர் அதிக பந்துகள் எடுத்துக் கொண்டு அடித்த சதமாக இருந்தது. நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக 246 பந்துகளில் அடித்த சதம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

கோலியை முந்தவில்லை

கோலியை முந்தவில்லை

கடந்த 15 வருடங்களில் கோலி 2012 நாக்பூர் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 289 பந்துகளில் அடித்து இருந்த சதமே, இந்திய வீரர்கள் மத்தியில் அதிக பந்துகள் எடுத்துக் கொண்டு அடித்த சதமாக இருக்கிறது. அதை புஜாராவால் கூட இன்னும் தொட முடியவில்லை என்பது வேடிக்கை தான்.

ஒரே தொடரில் 2 சதம்

ஒரே தொடரில் 2 சதம்

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் புஜாரா சரியாக ஆடுவதில்லை என்ற புகார் இருந்தது. அதை இங்கிலாந்து டெஸ்டில் உடைத்தார். ஆனால், இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு படி மேலே போய், ஒரே வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் முதன்முறையாக இரண்டு சதம் அடித்துள்ளார்.

ஆமை வேகம் தான் வேண்டும்

ஆமை வேகம் தான் வேண்டும்

புஜாரா ஆமை வேகத்தில் ஆடினாலும், அது தான் இந்திய அணிக்கு பல சமயங்களில் கை கொடுத்து வருகிறது. பல போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினாலும் தனி ஆளாக நின்று ரன் சேர்ப்பதில் கெட்டிக்காரர் புஜாரா. ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் புஜாராவை பாராட்டி வருகிறார்கள்.

ஹேமங் பதானி பாராட்டு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி டெஸ்ட் போட்டிகளின் முகம் புஜாரா என பாராட்டியுள்ளார்.

இவர் பொறுமையின் பாதை

புஜாரா பொறுமையின் பாதை என புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேமியன் பிளெம்மிங்.

வெளிநாடு டெஸ்ட்களில் சதங்கள்

2018க்கு முன்னர் 17 வெளிநாட்டு டெஸ்ட்களில் ஒரு சதம் மட்டுமே அடித்து இருந்தார் புஜாரா. ஆனால், இந்த ஆண்டு 10 டெஸ்ட்களில் 3 சதம் அடித்துள்ளார் என புகழ்ந்துள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Thursday, December 27, 2018, 10:24 [IST]
Other articles published on Dec 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+