For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்! ஓரமா போய் ஓய்வெடுங்க.. கோலியை ஓரங்கட்டிய புஜாரா.. சாதனைகளை அள்ளினார்

Recommended Video

Pujara missed 200 | இரட்டை சதத்தை நெருங்கிய புஜாரா

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் புஜாரா பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

கடந்த ஆண்டில் விராட் கோலி ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் அதிக ரன் அடித்த வீரராக இருந்ததோடு பல்வேறு சாதனைகளை முறியடித்து வந்தார். ஆனால், இந்த முறை கோலியை பின் தள்ளிய புஜாரா பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

டிராவிட் சாதனை முறியடிப்பு

டிராவிட் சாதனை முறியடிப்பு

மிக முக்கியமான சாதனையாக டிராவிட்டின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் புஜாரா. ஆஸ்திரேலிய மண்ணில் 2003-04 டெஸ்ட் தொடரில் 1203 பந்துகள் சந்தித்து, அதிக பந்துகள் எதிர் கொண்ட இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் டிராவிட். அதை தனதாக்கி உள்ளார் புஜாரா. புஜாரா தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 1258 பந்துகள் சந்தித்துள்ளார்.

500+ நிமிடங்கள் சாதனை

500+ நிமிடங்கள் சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு முறை ஒரே இன்னிங்க்ஸில் 500 நிமிடங்களுக்கும் அதிகமாக பேட்டிங் செய்தவர் என்ற சாதனையை இதுவரை மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே செய்து இருந்தனர். அந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார் புஜாரா. மற்ற மூன்று வீரர்கள் கவாஸ்கர், சச்சின் மற்றும் அலஸ்டர் குக்.

ஆஸ்திரேலியாவை காய விட்ட புஜாரா

ஆஸ்திரேலியாவை காய விட்ட புஜாரா

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற நான்கு அல்லது அதற்கும் குறைவான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணிக்கு எதிராக அதிக பந்துகள் சந்தித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் புஜாரா. புஜாரா நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸ் வரை 1258 பந்துகள் சந்தித்துள்ளார் புஜாரா.

அதிக நிமிடங்கள்

அதிக நிமிடங்கள்

இந்திய பேட்ஸ்மேன்களில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக நேரம் பேட்டிங் செய்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். புஜாரா இந்த தொடரில் இதுவரை 1868 நிமிடங்கள் பேட்டிங் செய்துள்ளார்.

கவாஸ்கர் அசத்தல்

கவாஸ்கர் அசத்தல்

முதல் இரண்டு இடங்களிலும் கவாஸ்கர் இரண்டு டெஸ்ட் தொடர்களில் செய்த பேட்டிங் இடம் பெற்றுள்ளது. 1971இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1978 நிமிடங்களும், 1981/82இல் 1976 நிமிடங்களும் பேட்டிங் செய்து மிரட்டியுள்ளார் கவாஸ்கர். தற்போது புஜாரா மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

அதிக பந்துகள் சந்தித்த வீரர்கள்

அதிக பந்துகள் சந்தித்த வீரர்கள்

ஒரே வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகள் சந்தித்த வீரர்கள் பட்டியலில் புஜாரா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். டிராவிட் 1336 பந்துகள், அலஸ்டர் குக் 1285 பந்துகள், புஜாரா 1258 பந்துகள் சந்தித்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

கோலியை ஓரங்கட்டிய புஜாரா

கோலியை ஓரங்கட்டிய புஜாரா

இந்தியா கடந்த ஆண்டு ஆடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் கோலி மட்டுமே ஆதிக்கம் செலுத்தினார். அவர் மட்டுமே பல்வேறு சாதனைகளை டெஸ்ட் தொடரில் முறியடித்து வந்தார். இந்த முறை புஜாரா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலியை விட இருமடங்கு ரன்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Story first published: Friday, January 4, 2019, 17:51 [IST]
Other articles published on Jan 4, 2019
English summary
India vs Australia : Pujara keep Kohli aside and break many records in Australia test series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+