Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்ளோ நல்லா ஆடுறேன்னா அதுக்கு இவர் தான் காரணம்.. புஜாரா நன்றி சொன்ன அந்த மனிதர் யார்?

Recommended Video

Pujara missed 200 | இரட்டை சதத்தை நெருங்கிய புஜாரா

சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் புஜாரா தன் கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்டத்தை எட்டியுள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்து சாதனை புரிந்துள்ள புஜாரா, அதற்காக குறிப்பிட்ட ஒரு நபருக்கு நன்றி கூறியுள்ளார்.

மூன்று சதங்கள்

மூன்று சதங்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் புஜாரா 521 ரன்கள் அடித்துள்ளார். முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தார். நான்காவது டெஸ்டில் இரட்டை சதத்தை நெருங்கி பின் தவறவிட்டார்.

நீண்ட நேர பேட்டிங்

நீண்ட நேர பேட்டிங்

இது மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட நேரம் பேட்டிங் செய்த புஜாரா, அதிக பந்துகள் சந்தித்தது (1258 பந்துகள்), அதிக நேரம் களத்தில் நின்றது (1800+ நிமிடங்கள்) என பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

காரணம் யார்?

காரணம் யார்?

இதற்கெல்லாம் காரணம் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட் தான் என கூறியுள்ள புஜாரா அவருக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார். புஜாரா சிறப்பாக பேட்டிங் செய்ததாக ரசிகர்கள் பாராட்டி வரும் வேளையில், புஜாரா தன் திறனுக்கு காரணம் என பேட்ரிக்கை கை காட்டியுள்ளார்.

நன்றி பாராட்டினார்

நன்றி பாராட்டினார்

மேலும், கடந்த மாதம் பேட்ரிக், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட்டதை விட புஜாராவுடனே அதிக நேரம் செலவிட்டதாக கூறி அவரை பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலியை பின்தள்ளி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் புஜாரா.

Story first published: Friday, January 4, 2019, 19:09 [IST]
Other articles published on Jan 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+