
இடை நீக்கம்
இந்த வருட துவக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக பிசிசிஐ-யால் இடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், அதில் இருந்து மீண்ட ராகுல் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு பெற்றார்.

அரைசதம் அடித்தார்
உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற இது கடைசி வாய்ப்பு என்ற நிலையில், ராகுல் முதல் டி20 போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் கைவிட்ட நிலையில், அரைசதம் அடித்தார்.

அதிரடி துவக்கம்
தற்போது இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடிய ராகுல் 26 பந்துகளில் 47 ரன்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். இதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாலும், அணிக்கு அட்டகாசமான துவக்கம் அளித்து கலக்கினார்.

இடம் உறுதி
இதன் மூலம் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ள ராகுல், கிட்டத்தட்ட உலகக்கோப்பை அணியில் தன் இடத்தை உறுதி செய்துள்ளார். ரோஹித், தவான் இருவரும் துவக்க வீரர்களாக இருக்கும் நிலையில், ராகுல் மாற்று துவக்க வீரராக இருப்பார்.

ஒருநாள் தொடரில்..
இந்தியா அடுத்து ஐந்து போட்டிகள் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது. அந்த தொடரிலும் ராகுல் இடம் பெற்றுள்ளார். தேர்வாளர்கள் அந்த தொடரிலும் ராகுலை ஆட வைத்து பரிசோதிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











