Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாயன்க்கை கிண்டலா பண்றீங்க? ஆஸி. முன்னாள் வீரருக்கு சரியான பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி

மெல்போர்ன் : இந்திய அணியின் அறிமுக வீரர் மாயன்க் அகர்வாலை மூன்றாவது டெஸ்ட் போட்டியின் வர்ணனையில் கேலி செய்து சிரித்தார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கெர்ரி.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கெர்ரிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். கெர்ரி என்ன சொன்னார்? அதற்கு ரவி சாஸ்திரி என்ன பதிலடி கொடுத்தார்?

கெர்ரியின் கிண்டல் பேச்சு

கெர்ரியின் கிண்டல் பேச்சு

கெர்ரி தன் வர்ணனையில் மாயங்க் அகர்வால் ரஞ்சி தொடரில் அடித்த 300 ரன்கள் கான்டீன் ஊழியர்கள் அல்லது வெயிட்டர்களுக்கு எதிராக அடித்ததாக இருக்கும் என மிக மோசமாக கிண்டல் செய்து சிரித்தார். அவருடன் இருந்தா மற்ற ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

உள்ளூர் போட்டிகள் தரமற்றவையா?

உள்ளூர் போட்டிகள் தரமற்றவையா?

இந்திய உள்ளூர் போட்டிகள் தரமற்றவை என்றும், மாயன்க்கின் உள்ளூர் ஆட்டங்களின் சாதனைகள் பெரிதில்லை என்றும் அர்த்தம் கொள்ளும் வகையில் அப்படி கூறினார் கெர்ரி. மாயன்க் அகர்வால் ரஞ்சி தொடரில் 300+ ரன்கள் அடித்ததையும் குறிப்பிட்டு இப்படி பேசினார்.

ரசிகர்கள் கடும் எதிர்வினை

ரசிகர்கள் கடும் எதிர்வினை

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்வினை ஆற்றினர். நீங்கள் ஜோக்அடித்து சிரிக்க இந்த விஷயம் தான் கிடைத்ததா என ஆஸ்திரேலியர்களும், இனவாத பேச்சு என சில இந்திய ரசிகர்களும் கெர்ரியை காய்ச்சி எடுத்தார்கள். பின்னர் கெர்ரி இதற்கு மன்னிப்பு கோரினார்.

ரவி சாஸ்திரி பதிலடி

ரவி சாஸ்திரி பதிலடி

ரவி சாஸ்திரியிடம் கெர்ரியின் பேச்சு பற்றி கேட்ட போது, தன் பாணியில் சரியான பதிலடி கொடுத்தார் ரவி சாஸ்திரி. "மாயன்க் கெர்ரிக்கு ஒரு தகவல் வைத்துள்ளார். "நீங்க கான்டீன் திறந்தால், அவர் வந்து அந்த காபியை முகர்ந்து பார்க்க உள்ளார். இந்த ஊர் காபியையும், இந்தியாவில் உள்ள காபியையும் ஒப்பிட்டு எது சிறந்த காபி என பார்க்க இருக்கிறார்" என மிக நக்கலாக கூறினார் ரவி சாஸ்திரி.

Story first published: Friday, December 28, 2018, 18:57 [IST]
Other articles published on Dec 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+