Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த அஸ்வின்

பிரிஸ்பேன்: ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர் உலகின் சிறந்த டெஸ்ட் போட்டி ஆல்ரவுண்டராக பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியதிலும் பல சாதனைகளை செய்து இருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 765 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 953 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். அதே போல, அஸ்வின் இந்திய அணிக்காக 537 டெஸ்ட் போட்டி விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே முதல் இடத்தில் 619 விக்கெட்களுடன் இருக்கிறார்.

அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேனாக ஆறு சதங்களை அடித்து இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3503 ரன்களையும் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். மிக அதிக வயதில் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ஐந்து விக்கெட்களை வீழ்த்திய ஆல் ரவுண்டர் என்ற சாதனையை அஸ்வின் செய்து இருக்கிறார். மேலும் ஒரே போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட் வீழ்த்திய சாதனையை அவர் மூன்று முறை செய்துள்ளார். இதை செய்த முதல் இந்திய வீரரும் அவர்தான்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை 20க்கும் அதிகமான முறையும், ஒரே இன்னிங்ஸில் 5க்கும் அதிகமான விக்கெட்களை 30 முறைக்கும் அதிகமாக வீழ்த்தி சாதனை செய்து இருக்கிறார். இந்த சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரும் செய்ததில்லை. 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இந்த சாதனையை செய்ததில்லை.

இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய சாதனையையும் அஸ்வின் வைத்துள்ளார். அவர் இதுவரை 37 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார். மேலும், 11 முறை தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார். உலகிலேயே அதிக முறை தொடர்நாயகன் விருதை வென்ற வீரராக முத்தையா முரளிதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

Story first published: Wednesday, December 18, 2024, 13:19 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+