Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 15 நிமிடம்.. இளம் ஆஸ்திரேலிய வீரரின் வாழ்க்கையை மாற்றிய ஜடேஜா.. மகிழ்ச்சியில் குஹ்னேமன்

சிட்னி : ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மேத்யூ குஹ்னேமன், தனக்கு ரவீந்திர ஜடேஜா கூறிய அறிவுரைகளை பயன்படுத்தி உள்ளூர் போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாகவும், அடுத்து வரும் தொடரிலும் அதை செயல்படுத்த உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் இளம் ஸ்பின்னர் மேத்யூ குஹ்னேமன் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தூர் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று இருந்தார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தி கவனம் ஈர்த்து இருந்தார். அதன் பின் அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

INDIA vs AUSTRALIA : Ravindra Jadeja advice helps Matthew Kuhnemann

அவர் நான்கு நாள் டெஸ்ட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பங்கேற்று இருந்தார். அதில் அதிக விக்கெட்களை அள்ளிய நிலையில் அடுத்து டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்க இருக்கிறார். இந்த நிலையில், தான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட இந்திய அணியின் அனுபவ ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா கூறிய சில அறிவுரைகளை பின்பற்றியது தான் காரணம் என கூறி உள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின் தான் ரவீந்திர ஜடேஜாவுடன் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது அவர் பந்துவீச்சில் அவர் தனக்கு சில அறிவுரைகளை வழங்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

"அந்த தொடர் முடிந்த பின் அவர் எனக்கு சில விஷயங்களை கூறினார். அவை அற்புதமாக இருந்தன. அதை நான் கவுன்டி தொடரில் செயல்படுத்தி பார்த்தேன். அது நன்றாக வேலை செய்தது. அதை பிக் பாஷ் லீக் தொடரிலும் செயல்படுத்தி சில வெற்றிகளை பெறுவேன் என நம்புகிறேன்" என்றார் மேத்யூ குஹ்னேமன்.

இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் மட்டுமே மேத்யூ குஹ்னேமன் இடம் பெற்று வருகிறார். அவர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். விரைவில் அணியில் நிரந்தர இடத்தை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அதற்கு ஜடேஜா தந்த அறிவுரைகளை பயன்படுத்தி வருகிறார்.

Story first published: Thursday, December 7, 2023, 13:05 [IST]
Other articles published on Dec 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+