For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குழந்தைகளை பாத்துக்கிறியா? என் மனைவியோட சினிமா போகணும்.. ரிஷப் பண்ட்டை வைச்சு கலாய்த்த ஆஸி. கேப்டன்

மெல்போர்ன்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் மூன்றாவது டெஸ்டின் இடையே கடுமையாக கேலி செய்துள்ளார்.

இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது, ரிஷப் பண்ட்டை டிம் பெய்ன் குறி வைத்து கலாய்த்தார். என்ன சொன்னார் என பார்க்கலாம்.

ஒருநாள் அணியில் இடம் இல்லை

ஒருநாள் அணியில் இடம் இல்லை

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள் அணி கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

உள்ளூர் அணியில் ரிஷப்

உள்ளூர் அணியில் ரிஷப்

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் டிம் பெய்ன் கீப்பிங் செய்து கொண்டு இருந்த போது பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டிடம், "தோனி மறுபடியும் ஒருநாள் அணியில் வந்துட்டார். நீ ஹர்ரிகேன் (ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 அணி) அணிக்கு ஆடுறியா?" என கலாய்த்தார்.

வீடு ரெடி பண்ணுங்க

வீடு ரெடி பண்ணுங்க

ஒருநாள் அணியில் இல்லாததால், ரிஷப் ஓய்வில் இருப்பார் என்பதை வைத்தும் கேலி செய்தார் டிம். "ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரத்தில் ஓய்வை கழிக்கலாமே.. இவருக்கு ஒரு வீடு ரெடி பண்ணுங்க" என கேலி செய்தார்.

குழந்தைகளை பாத்துக்கிறியா?

குழந்தைகளை பாத்துக்கிறியா?

மேலே கூறிய எல்லாவற்றையும் விட மோசமான கலாய்த்தல் ஒன்றை செய்தார் டிம் பெய்ன். "ஓய்வு நேரத்தில் என் குழந்தைகளை பாத்துக்கிறியா? நானும், என் மனைவியும் சினிமாவுக்கு போய்ட்டு வருவோம்" என கூறி மரண கலாய் கலாய்த்தார் ஆஸ்திரேலிய கேப்டன்.

அனுபவிக்கும் ரிஷப் பண்ட்

அனுபவிக்கும் ரிஷப் பண்ட்

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பது போல ரிஷப் பண்ட் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களை இதே போல இம்சை செய்ததற்கு, சேர்த்து வைத்து இப்போது அனுபவித்து வருகிறார்.

கலாய்க்கும் டிம் பெய்ன்

கலாய்க்கும் டிம் பெய்ன்

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இரண்டாம் போட்டியில் கோலியின் சீண்டலுக்கு பதிலடி கொடுத்தார். மூன்றாம் டெஸ்டில் அவரே களம் இறங்கி ரோஹித், ரிஷப் பண்ட் போன்றோரை கலாய்த்து வருகிறார்.

Story first published: Friday, December 28, 2018, 18:08 [IST]
Other articles published on Dec 28, 2018
English summary
India vs Australia : Rishab Pant got bruutally trolled by Tim Paine in Melbourne
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X