Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் ரேங்கில் தோனியை காலி செய்த ரிஷப் பண்ட்.. புஜாரா, ஜடேஜாவும் அதிரடி முன்னேற்றம்

துபாய் : இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்க்ஸ்களில் 350 ரன்கள் அடித்து இருந்தார் ரிஷப் பண்ட். இதன் மூலம் தன் பேட்டிங் தரவரிசையை வேகமாக முன்னேற்றிக் கொண்டுள்ளார்.

ரிஷப் பண்ட் 17வது இடம்

ரிஷப் பண்ட் 17வது இடம்

ரிஷப் பண்ட் சிட்னி டெஸ்டில் 159 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்த வாரத்திற்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பண்ட் அதிரடியாக 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தை பகிர்ந்த பண்ட்

முதல் இடத்தை பகிர்ந்த பண்ட்

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் தரவரிசையில் பாரூக் இன்ஜினியர் 17வது ரேங்கில் இருந்ததே அதிகம். அந்த முதல் இடத்தை ரிஷப் பண்ட்டும் பகிர்ந்து கொண்டுள்ளார். தோனி அதிகபட்சமாக 19வது இடத்தை மட்டுமே டெஸ்ட் தரவரிசையில் பிடித்துள்ளார்.

புஜாரா 3ஆம் இடம்

புஜாரா 3ஆம் இடம்

மற்ற இந்திய வீரர்களும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். டெஸ்ட் தரவரிசையில் புஜாரா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முதல் இடத்தில் கோலி நீடிக்கிறார். ஜடேஜா 57 வது இடத்தில் இருக்கிறார்.

மாயன்க் அகர்வால் அதிரடி

மாயன்க் அகர்வால் அதிரடி

புதிய வீரர் மாயன்க் அகர்வால் அதிரடியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் தரவரிசையில் 62வது இடத்தை பிடித்து ஆச்சரியமளித்துள்ளார். இவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா 5ஆம் இடம்

ஜடேஜா 5ஆம் இடம்

பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 45வது இடத்திலும், பும்ரா 16வது இடத்திலும், ஷமி 22வது இடத்திலும் இருக்கின்றனர். ஜடேஜா ஒரு இடம் முன்னேறி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Tuesday, January 8, 2019, 18:13 [IST]
Other articles published on Jan 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+