Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ஆட வந்தோமா.. இல்லை ரெஸ்லிங் ஆட வந்தோமா.. கொரளி வித்தை காட்டி சாதித்த ரிஷப் பண்ட்

Recommended Video

மைதானத்தில் வித்தை காட்டிய ரிஷப் பண்ட்- வீடியோ

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் சதம் அடித்து கலக்கினார். கூடவே, சில வித்தைகளையும் காட்டி இருக்கிறார் இந்த இளம் வீரர்.

ரிஷப் பண்ட் சதம் அடித்ததன் மூலம் சில சாதனைகளையும் செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் செய்துள்ளார்.

இந்தியா அபார பேட்டிங்

இந்தியா அபார பேட்டிங்

சிட்னி டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்தது மாயன்க் 77, புஜாரா 193 ரன்கள் அடித்தனர். ரிஷப் பண்ட் முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 159 ரன்கள் அடித்து இருந்த போது இந்திய அணி 622 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ டிக்ளர் செய்தது.

வித்தை காட்டிய பண்ட்

வித்தை காட்டிய பண்ட்

ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது இடைவேளையில் கீழே படுத்து சிறிது ஓய்வு எடுத்தார். கையை பயன்படுத்தாமல் எழுந்திரிக்க முயன்ற ரிஷப் பண்ட், ரெஸ்லிங் வீரர்கள் ஷான் மைக்கேல்ஸ், டால்ஃப் ஸிக்ளர் போல காலை மேலே கொண்டு போய், உடலை உந்தி மேலே எழுந்தார்.

கொறளி வித்தை மாதிரி இருக்கே

கொறளி வித்தை மாதிரி இருக்கே

இந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதை கண்ட சிலர் ரெஸ்லிங் வீரர்கள் போல முயன்றுள்ளார் என்றும், கொறளி வித்தை என்றும் கூறி கலாய்த்து வருகின்றனர்.

சாதனை சதம்

சாதனை சதம்

இப்படி கொறளி வித்தை காட்டினாலும், ரிஷப் பண்ட் சாதனை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இதுவே ரிஷப்பின் இரண்டாவது சதம் ஆகும். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் அடிக்கும் முதல் சதம் இதுவே.

150+ ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள்

150+ ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள்

இந்திய விக்கெட் கீப்பர்களில் 150 ரன்களை கடந்த நான்காவது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆவார். இதற்கு முன்பு புதி குண்டேரன் 192 ரன்கள், நயன் மோங்கியா 152 ரன்கள், தோனி 224 ரன்கள் அடித்து உள்ளனர். ரிஷப் பண்ட் இந்த 150+ பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார்.

ஆசிய அளவில் சாதனை

ஆசிய அளவில் சாதனை

மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும், ஆசிய அளவில் ஒரே டெஸ்ட் தொடரில் 200 ரன்கள் மற்றும் 20 விக்கெட் வீழ்ச்சிகள் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.

கோலியை முந்தினார்

கோலியை முந்தினார்

மேலும், இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் புஜாராவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் ரிஷப் பண்ட். இந்த பட்டியலில் நேற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்த கோலியை முந்தியுள்ள ரிஷப் பண்ட் 7 இன்னிங்க்ஸ்களில் 350 ரன்கள் அடித்துள்ளார். புஜாரா 521 ரன்கள் அடித்துள்ளார்.

Story first published: Friday, January 4, 2019, 15:13 [IST]
Other articles published on Jan 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+