For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை விட அதிக சதம் அடிப்பார் ரிஷப் பண்ட்! ரிக்கி பாண்டிங் சொல்வது சரியா? தோனியை முந்துவாரா பண்ட்?

சிட்னி : ரிஷப் பண்ட் சிட்னி டெஸ்டில் சதம் அடித்ததை தொடர்ந்து பலரும் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.

ரிஷப் பண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்துள்ள நிலையில், இவரை அடுத்த கில்கிறிஸ்ட் எனவும், தோனியை முந்துவார் எனவும் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

நிதான ஆட்டம் ஆடிய பண்ட்

நிதான ஆட்டம் ஆடிய பண்ட்

சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் அடித்து இருந்தார். இந்த முறை அவர் அதிரடியை கையில் எடுக்காமல் நிதானமாக ஆடி ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் பண்ட்

இரண்டாம் இடத்தில் பண்ட்

அதிரடி வீரராக அறியப்படும் ரிஷப் பண்ட் தன்னால் நிதானமாகவும் ஆட முடியும் என நிரூபித்து டெஸ்ட் அணியில் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொன்டுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் பண்ட்.

அதிக டெஸ்ட் சதங்கள்

அதிக டெஸ்ட் சதங்கள்

தோனியை விட ரிஷப் பண்ட் அதிக டெஸ்ட் சதங்கள் அடிப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். பாண்டிங் கூறுகையில் தோனி பல டெஸ்ட் போட்டிகளில் ஆடியும் 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். பண்ட் அதை விட அதிகம் அடிப்பார் என பாண்டிங் கூறினார்.

அடுத்த கில்கிறிஸ்ட்

அடுத்த கில்கிறிஸ்ட்

21 வயதே ஆகும் ரிஷப் பண்ட் அதற்குள் தன் ஒன்பதாவது டெஸ்டில் ஆடி வருகிறார். இரண்டு சதங்களையும் அடித்துள்ளார் என குறிப்பிட்டார் பாண்டிங். ரிஷப் பண்ட் அடுத்த கில்கிறிஸ்ட் போன்ற ஒரு வீரர் என குறிப்பிட்ட பாண்டிங், விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் இன்னும் கொஞ்சம் பயிற்சி செய்து முன்னேற வேண்டும் என குறிப்பிட்டார்.

டெல்லி டேர்டெவில்ஸ் பாசம்

டெல்லி டேர்டெவில்ஸ் பாசம்

ஐபிஎல் அணியான டெல்லி டேர்டெவில்ஸ்-இல் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட்டுக்கு பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாசத்தில் தான் பண்ட்டை குறித்து உயர்த்திப் பேசுகிறாரா பாண்டிங்? தோனியை விட பெரிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக வருவாரா ரிஷப் பண்ட்?

தோனி - பண்ட் ஒப்பீடு

தோனி - பண்ட் ஒப்பீடு

தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் சராசரி 38, 6 சதம், 33 அரைசதம், 256 கேட்ச்கள், 38 ஸ்டம்பிங்குகள் ஆகியவற்றை எட்டியுள்ளார். ரிஷப் பண்ட் சிட்னி டெஸ்டுக்கு முன்னதாக 8 டெஸ்ட் போட்டிகளில் சராசரி 38, 1 சதம், 2 அரைசதம், 40 கேட்ச்கள், 2 ஸ்டம்பிங்குகள் எட்டியுள்ளார்.

வாய்ப்பு அதிகம்

வாய்ப்பு அதிகம்

விக்கெட் கீப்பிங்கில் தோனியை விட சராசரியாக அதிக கேட்ச்கள் பிடித்துள்ளார் ரிஷப் பண்ட். சில கேட்ச்களை அவர் விடாமல் இருந்திருந்தால் இன்னும் கூட அதிக கேட்ச்கள் பிடித்திருக்கலாம். பேட்டிங் சராசரி சிட்னி டெஸ்டுடன் சேர்த்துப் பார்த்தால் நிச்சயம் தோனியை விட அதிகமாகவே இருக்கும். பார்ம் இழக்காமல் இருந்தால், தோனியை ரிஷப் முந்துவார் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Saturday, January 5, 2019, 16:55 [IST]
Other articles published on Jan 5, 2019
English summary
India vs Australia : Rishabh Pant will hit more centuries than Dhoni says Ricky Ponting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+