Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20 போட்டியில் நம்ம தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா? #IndvAus

விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்க உள்ளது.

இதற்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் களம் இறங்குவார்கள் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ராகுல், ரிஷப் பண்ட் குறித்தே பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளன.

கடைசி தொடர்

கடைசி தொடர்

குறிப்பாக உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தினேஷ் உறுதி

தினேஷ் உறுதி

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறாத சில வீரர்கள் டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். அதில் முக்கியமானவர் தினேஷ் கார்த்திக். அவர் டி20 தொடரில் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது விக்கெட் கீப்பர்

இரண்டாவது விக்கெட் கீப்பர்

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக் இல்லாத நிலையில் அவரை டி20 தொடரிலும், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் பரிசோதித்து பார்க்க வாய்ப்புள்ளது.

மாற்று துவக்க வீரர்

மாற்று துவக்க வீரர்

அதே சமயம், மூன்றாவது துவக்க வீரர் யார் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்காமல் இருக்கிறது. அந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் பெயர் அடிபடுகிறது. கே எல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் இருவரும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் துவக்க வீரராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

யாருக்கு ஓய்வு?

யாருக்கு ஓய்வு?

துவக்க வீரர்களை டி20 தொடரில் மட்டுமே சோதிக்க அணி நிர்வாகம் விரும்பும். எனவே, டி20 தொடரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ ஓய்வில் இருக்க வாய்ப்புள்ளது.

விஜய் ஷங்கர் ஆடுவாரா?

விஜய் ஷங்கர் ஆடுவாரா?

அதே போல் புதிய வீரர் விஜய் ஷங்கர் டி20 தொடரில் முதல் போட்டியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஹர்திக் பண்டியா இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

உமேஷ் யாதவ்வுக்கு கடைசி வாய்ப்பு

உமேஷ் யாதவ்வுக்கு கடைசி வாய்ப்பு

அறிமுக வீரராக மாயங்க் மார்கண்டே முதல் டி20யில் களமிறங்கலாம். வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இதற்கு முன் பல வாய்ப்புகளை வீணடித்து இருந்தாலும், அவருக்கும் உலகக்கோப்பைக்கு முன் ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கலாம்.

உத்தேச அணி

உத்தேச அணி

முதல் டி20 போட்டிக்கான உத்தேச அணி - ராகுல், தவான், கோலி, விஜய் ஷங்கர், தோனி, ரிஷப் பண்ட், க்ருனால் பண்டியா, சாஹல், மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ், பும்ரா.

Story first published: Saturday, February 23, 2019, 16:42 [IST]
Other articles published on Feb 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+