Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்.. தோனி கூட தான் கேட்ச், ஸ்டம்ப்பிங் எல்லாம் மிஸ் பண்ணிருக்காரு! ரிஷப் பண்ட் கோச் தடாலடி பேச்சு!

Recommended Video

தோனி- பண்ட் ஒப்பீடு : பண்ட் கோச் தடாலடி பேச்சு!- வீடியோ

டெல்லி : இந்திய அணி நான்காவது ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வி அடைந்தது.

அந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பீல்டிங் சொதப்பல்கள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மூன்று முறை விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகளை கோட்டை விட்ட ரிஷப் பண்ட் தான் என கூறப்பட்டு வருகிறது.

ஒப்பீடுகள்

ஒப்பீடுகள்

இதனால், ரிஷப் பண்ட், தோனி அளவுக்கு இல்லை என்ற ஒப்பீடுகளும் கிளம்பத் துவங்கியது. இன்னும் சொல்லப் போனால், ரிஷப் பண்ட் களத்தில் சொதப்பிய போதே, மொஹாலி ரசிகர்கள் "தோனி, தோனி" என கோஷம் எழுப்பி ஒப்பீட்டை துவங்கி விட்டனர்.

நியாயம் இல்லை

நியாயம் இல்லை

ஆனால், இந்த ஒப்பீடுகள் நியாயம் இல்லை என சில முன்னாள் வீரர்கள் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். தோனி நீண்ட அனுபவம் பெற்ற வீரர். அவருடன் இளம் வீரரான ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது முறையல்ல என கூறினர்.

காப்பாற்றும் முயற்சி

காப்பாற்றும் முயற்சி

இந்த விவகாரத்தில் ரிஷப் பண்ட்டின் முன்னாள் பயிற்சியாளர் சின்ஹாவும், அவருக்கு ஆதரவாக கருத்து கூறி இருக்கிறார். ஆனால், தோனியின் கடந்த காலத்தை எல்லாம் கூறி, அதனுடன் ஒப்பிட்டு தன் மாணவனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார் சின்ஹா. அப்படி என்ன சொன்னார்?

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்

ஒப்பீடுகள் குறித்து பேசிய சின்ஹா, தோனி போலவே, ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்பதால் பலரும் இப்படி ஒப்பிடுகிறார்கள். ஆனால், இது நியாயம் இல்லை.

அழுத்தம்

அழுத்தம்

இதனால், தோனி போலவே பண்ட் செயல்பட வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது என்றார். அவர் மனதில் அழுத்தம் இல்லாமல் இருந்தால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றார். அடுத்து தோனி 14 வருடங்கள் முன்பு இந்திய அணிக்குள் வந்த கதையை கூறி, பண்ட்டை ஒப்பிட்டார்.

14 வருடத்துக்கு முன்!

14 வருடத்துக்கு முன்!

இன்று பண்ட் இருக்கும் நிலைக்கும், தோனி 14 வருடத்துக்கு முன் அணிக்குள் வந்த போது இருந்த நிலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போது எந்த ஆகச் சிறந்த விக்கெட் கீப்பரும் இல்லை. அவருக்கு மாற்றாகவும் தோனி வரவில்லை என்றார்.

அன்றைய நிலை

அன்றைய நிலை

அப்போது தோனியை விட இளமையான தினேஷ் கார்த்திக் அல்லது பார்த்திவ் பட்டேல் என்ற நிலை தான் இருந்தது. அப்போது ரிஷப் பண்ட் இன்று சந்திக்கும் எந்த அழுத்தமும், எதிர்பார்ப்பும் இன்றி தோனி செயல்பட்டார் என்றார் சின்ஹா.

பதிலடி

பதிலடி

சரி, இப்படி எல்லாம் சொல்லி, ரிஷப் பண்ட் ஒரே போட்டியில் மூன்று வாய்ப்புகளை கோட்டை விட்டதை நியாயப்படுத்துகிறாரா? என நாம் நினைத்தால், அதற்கும் பதிலடி வைத்துள்ளார் பண்ட்டை காக்க வந்த சின்ஹா.

தோனி தவற விட்டுள்ளார்

தோனி தவற விட்டுள்ளார்

சின்ஹா கூறுகையில், உலகில் எந்த விக்கெட் கீப்பர் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் வாய்ப்பை தவற விடவில்லை? தோனி கூட தன் ஆரம்ப காலத்தில் கேட்ச்கள் மற்றும் ஸ்டம்பிங் வாய்ப்புகளை தவற விட்டுள்ளார் என்றார்.

வக்காலத்து

வக்காலத்து

மேலும், அதில் நல்ல விஷயம் என்னவென்றால், தேர்வாளர்கள் அவரை தொடரச் செய்தார்கள். ஒரே சீசனில் அவரை கைவிட்டு விடவில்லை. தோனி தன்னை முன்னேற்றிக் கொண்டு இந்த விளையாட்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக உயர்ந்தார் என கூறி தன் மாணவனுக்கு வக்காலத்து வாங்கினார் சின்ஹா.

Story first published: Tuesday, March 12, 2019, 12:48 [IST]
Other articles published on Mar 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+