Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஹல்க் ஹோகனுக்கு அப்புறம் நீதான்யா.. ஹீரோவாக கொண்டாடித் தீர்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் செய்த ஒரு விஷயம் ஆஸ்திரேலிய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை எந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் செய்யாத ஒரு விஷயத்தை அவர் செய்தார். மேலும், இந்திய அணிக்கு எதிராக அவர் அதிரடி ஆட்டம் ஆடினார். அதன் மூலம் தனது அறிமுக போட்டியிலேயே ஆஸ்திரேலியாவின் சூப்பர் ஹீரோவாக மாறி இருக்கிறார் சாம் கோன்ஸ்டாஸ்.

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது. பாக்ஸிங் டே போட்டி என்பதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பெருமளவில் மெல்போர்ன் மைதானத்தில் திரண்டு இருந்தனர். சுமார் 90 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று இருந்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்த போட்டியில் அறிமுகம் ஆன சாம் கோன்ஸ்டாஸ் துவக்க வீரராக இறங்கி பவுண்டரிகளாக அடித்து தள்ளினார். பும்ராவின் ஓவர்களில் வேகமாக ரன் சேர்த்தார். இதனிடையே அவரை விராட் கோலி சீண்டினார். வேண்டுமென்றே அவரை இடித்தார். அந்த சம்பவத்திற்கு பின் சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்த்து தனக்காக உற்சாக குரல் எழுப்புமாறு கூறினார்.

மைதானத்தில் இருந்த சுமார் 90,000 ரசிகர்களும் அவருக்காக உற்சாகக் குரல் எழுப்பினர். இது போன்ற எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் இதற்கு முன் செய்ததில்லை. அதிலும் அறிமுகப் போட்டியிலேயே ரசிகர்களை பார்த்து தனக்காக உற்சாகப் குரல் எழுப்புமாறு கூறியது ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவியது.

"WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகனுக்கு பிறகு இதுபோல ரசிகர்களை பார்த்து உற்சாகம் செய்யுமாறு சொன்னது இவர்தான்" என ஒரு ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அது உண்மை என்பதைப் போல சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறிய போது அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினர்.

தனது அறிமுக போட்டியிலேயே பும்ராவுக்கு எதிராக தில்லாக ஸ்கூப் ஷாட் அடித்தது ரசிகர்களை கவர்ந்தது. அவர் ஆட்டம் இழந்து சென்ற போது ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டனர். இதை அடுத்து அவர் மீண்டும் வெளியே வந்து ரசிகர்களுக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்தார். 19 வயதான ஒரு அறிமுக வீரர் இது போன்ற செயல்களை செய்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Thursday, December 26, 2024, 9:41 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+