Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட்.. இப்படி ஏமாத்திட்டீங்களே.. கேப்டனை பார்த்து கத்துக்குங்க! சஞ்சய் அறிவுரை!

Recommended Video

விஜய் ஷங்கர்,ரிஷப் பண்ட்டிற்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவுரை- வீடியோ

டெல்லி : இந்திய அணி ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் விஜய் ஷங்கர் மற்றும் ரிஷப் பண்ட் தங்கள் வாய்ப்பு வீணடித்து விட்டனர் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா ஆறுதல்

ரோஹித் சர்மா ஆறுதல்

நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியால் இந்த இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டுமே 56 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

ஜாதவ் - புவி போராட்டம்

ஜாதவ் - புவி போராட்டம்

மற்ற பேட்ஸ்மேன்களில் கேதார் ஜாதவ் 44, புவனேஸ்வர் குமார் 46 ரன்கள் அடித்து கடைசி நேரத்தில் இந்திய அணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், 6 விக்கெட்கள் இழந்த நிலையில் இந்திய அணியால் மீள முடியவில்லை.

சொற்ப ரன்கள்

சொற்ப ரன்கள்

இந்திய அணி தவான், கோலியை விரைவில் இழந்த நிலையில், ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர் அடுத்து களமிறங்கினர். எனினும், இவர்கள் இருவரும் தலா 16 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அரிய வாய்ப்பு

இந்திய அணி தடுமாறிய போது தங்கள் திறமையைக் காட்ட அரிய வாய்ப்பு கிடைத்தும் அதை ரிஷப் பண்ட் மற்றும் விஜய் ஷங்கர் வீணடித்தது பெரும் ஏமாற்றமாக இருந்ததாக தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

கற்றுக் கொள்ள வேண்டும்

கற்றுக் கொள்ள வேண்டும்

விஜய் ஷங்கர் பந்தை சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததை குறிப்பிட்டு, விஜய், ரிஷப் பண்ட் அல்ல. அவர் அவரது கேப்டனைப் போல தரையோடு அடித்து ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை வளர்ப்பது எப்படி என கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

நிரூபிக்கத் தவறினர்

நிரூபிக்கத் தவறினர்

ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர் இருவரும் ஆஸ்திரேலிய தொடரில் போதிய வாய்ப்பு பெற்றும் தங்கள் திறமையை நிரூபிக்கத் தவறியுள்ளனர் என்பதே உண்மை. உலகக்கோப்பை அணியில் இவர்கள் இடம் பெறுவார்களா?

Story first published: Thursday, March 14, 2019, 12:22 [IST]
Other articles published on Mar 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+