Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பையனை ஓபனிங் இறக்கலாமே.. மஞ்ச்ரேக்கருக்கு மட்டும் எப்படி தான் புதுசு புதுசா ஐடியா வருதோ?

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்டில் எந்த இரண்டு வீரர்கள் துவக்கம் அளிப்பார்கள் என்பது பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரியாக ரன் குவிக்கவில்லை.

ராகுலை நீக்க வேண்டும்

ராகுலை நீக்க வேண்டும்

ராகுல் முதல் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் 44 ரன்கள் எடுத்திருந்தாலும், இந்த ஆண்டு முழுவதும் அவர் ஆடிய போட்டிகளில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.

மாயங்க் அகர்வால் உள்ளே

மாயங்க் அகர்வால் உள்ளே

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த மாயங்க் அகர்வால் துவக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. முரளி விஜய் - மாயங்க் அகர்வால் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனுமா விஹாரியை இறக்கலாம்

ஹனுமா விஹாரியை இறக்கலாம்

ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முற்றிலும் புதிய கோணத்தில் துவக்க வீரர்களை தேர்வு செய்ய யோசனை தெரிவித்துள்ளார். அதாவது, மாயங்க் அகர்வால் ஆஸ்திரேலியாவில் தன் முதல் போட்டியை ஆடும் போது அவரிடம் நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதனால், அவரை விடுத்து ஹனுமா விஹாரியை மிடில் ஆர்டரில் இருந்து துவக்க வீரராக மாற்றலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

துவக்க வீரர்கள் விஜய் - விஹாரி

துவக்க வீரர்கள் விஜய் - விஹாரி

ஹனுமா விஹாரி நல்ல திறன் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார். அவர் முன் வரிசையில் நன்றாக பேட்டிங் செய்வார். அதனால் முரளி விஜய் மற்றும் ஹனுமா விஹாரியை துவக்க வீரர்களாக களம் இறக்க வேண்டும் என கூறினார் மஞ்ச்ரேக்கர்.

Story first published: Saturday, December 22, 2018, 17:54 [IST]
Other articles published on Dec 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+