For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - ஆஸி. தொடர் எந்த சேனலில் பார்ப்பது? ஜியோ சினிமாவில் இலவசமா? போட்டி அட்டவணை, வீரர்கள் விவரம்

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 முதல் நடைபெற உள்ளது.

2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த இரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் தொடர் ஆகும். உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகளாக இந்த தொடரை இரு அணிகளும் பயன்படுத்திக் கொள்ளும்.

INDIA vs AUSTRALIA schedule, timings, live streaming, squad details in tamil

முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 - 2 என தோல்வி அடைந்து இருக்கிறது ஆஸ்திரேலியா. எனினும், அந்தப் போட்டியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களமிறங்க உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் இந்த தொடரில் ஆட உள்ளனர்.

மறுபுறம், இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் கோப்பை வென்று இந்த தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பைக்கு பின் நான்கு நாட்கள் இடைவெளியில் இந்த தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக முக்கிய வீரர்களுக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 அன்று மொஹாலியில் துவங்க உள்ளது. அடுத்து செப்டம்பர் 24 மற்றும் 27ஆம் தேதிகளில் இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறும்.

இந்தியா - ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் எப்படி காண்பது?

இந்தியாவில் இந்த தொடர் ஸ்போர்ட்ஸ் 18 (Sports18) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க விரும்புபவர்கள் ஜியோ சினிமா (Jio Cinema) ஆப்பில் இலவசமாக இதை கண்டுகளிக்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் முழு அட்டவணை :

இந்தியா - ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி: 22 செப்டம்பர் 2023 (வெள்ளிக்கிழமை), மொஹாலியில் பிற்பகல் 1:30 மணிக்கு துவங்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி: 24 செப்டம்பர் 2023 (ஞாயிறு), இந்தூரில் பிற்பகல் 1:30மணிக்கு துவங்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி: 27 செப்டம்பர் 2023 (புதன்கிழமை), ராஜ்கோட்டில் பிற்பகல் 1:30 மணிக்கு துவங்கும்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ஆர் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (சி), ஹர்திக் பாண்டியா, (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி :

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸீன் அபாட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்கலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா

Story first published: Tuesday, September 19, 2023, 9:39 [IST]
Other articles published on Sep 19, 2023
English summary
INDIA vs AUSTRALIA schedule, timings, live streaming, Live telecast, India and Australia squad details in tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+