Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிச்சுடலாம்னு நினைச்சா இப்படி ஆயிடுச்சே!! மழையால் ரத்தானது இந்தியா - ஆஸி. 2வது டி20 போட்டி

Recommended Video

இந்தியா பௌலிங் : திணறிய ஆஸி. வீரர்கள்- வீடியோ

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் நகரில் நடந்த இரண்டாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

முதல் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, தொடரை தக்க வைக்க இந்திய அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

தற்போது மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்பட்டதால் இந்தியா தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்கு முன்னதாக இந்த போட்டியில் நடைபெற்ற நிகழ்வுகளை காணலாம்.

India vs Australia 2018 2nd T20I Live Score

இந்திய அணியில் மாற்றம் இல்லை

இந்திய அணியில் மாற்றம் இல்லை

முதல் டி20 போட்டியில் ஆடிய அதே இந்திய அணி இரண்டாம் போட்டியிலும் ஆடியது. எந்த புதிய மாற்றமும் செய்யப்படவில்லை. மழை பெய்யும் என இந்த போட்டி துவங்கும் முன்பே கணிக்கப்பட்டது.

இந்திய அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி வீரர்கள் விவரம்

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் கலீல் அஹ்மது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்

ஆரோன் பின்ச் (கேப்டன்), டி'ஆர்சி ஷார்ட், கிறிஸ் லின், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பென் மெக்டெர்மாட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆடம் சாம்பா, ஆண்ட்ரூ டை, ஜேசன், நாதன் கோல்டர் நைல்

ஆஸ்திரேலியா பேட்டிங் ஸ்கோர்

ஆஸ்திரேலியா பேட்டிங் ஸ்கோர்

டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆஸி. அணி கேப்டன் ஆரோன் பின்ச் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரன் அடிக்காமல் வெளியேறினார். அடுத்து கிறிஸ் லின் 13, ஷார்ட் 14, ஸ்டோய்னிஸ் 4, மாக்ஸ்வெல் 19, கேரி 4, கோல்டர் நைல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்துஇருந்த போது மழை பெய்தது. அப்போது மெக்டெர்மாட் 32, டை 12 ரன்கள் அடித்து களத்தில் இருந்தனர்.

விட்டு விட்டு பெய்த மழை

விட்டு விட்டு பெய்த மழை

மழை நீண்ட நேரம் விட்டு விட்டு பெய்தது. ஒவ்வொரு முறை மழை நிற்கும் போதும் அம்பயர்கள் ஓவர்கள் மற்றும் இலக்கை குறைத்து அறிவித்து வந்தனர். ஆனால், வீரர்கள் ஆட்டத்தை துவக்கும் முன் மீண்டும் மழை அதிகரித்து வந்தது. இது போல மூன்று முறைக்கும் மேல் நடந்து ரசிகர்களை வெறுப்பேற்றியது. கடைசியில் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர் அம்பயர்கள். இதனை அடுத்து டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த டி20 போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. தொடரை சமனில் நிறைவு செய்ய அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Story first published: Friday, November 23, 2018, 17:15 [IST]
Other articles published on Nov 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+