பும்ரா, ஷமி மிரட்டல் பந்துவீச்சு.. சமாளிக்க முடியாமல் அடி வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள்
Recommended Video

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் இருவரும் இந்திய பந்துவீச்சில் அடிபட்டனர்.
ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது இந்திய அணியின் தாக்குதல் பாணி பந்துவீச்சை எதிர்கொண்டனர்.
பின்ச் கை விரல் காயம்
முஹம்மது ஷமி வீசிய 13வது ஓவரில் ஆரோன் பின்ச் வலது கை சுட்டு விரலில் காயம் பட்டது. இதனால், கடும் வலியில் துடித்த அவர் 25 ரன்கள் அடித்த நிலையில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

மீண்டும் பேட்டிங் ஆட வந்தார்
மருத்துவ பரிசோதைனைகளுக்கு பின் ஆரோன் பின்சுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை என கூறப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் நான்காம் நாளில் பேட்டிங் செய்ய வந்தார். இதனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஷமி அசத்தல் பந்துவீச்சு
ஆனால், ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்து மேற்கொண்டு ரன்கள் எதுவும் குவிக்காமல் வெளியேறினார். ஷமி இரண்டாம் இன்னிங்க்ஸில் அருமையாக பந்து வீசினார். முதல் இன்னிங்க்ஸில் விக்கெட் வீழ்த்தாத ஷமி, இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
பும்ரா வீசிய பவுன்சர்
மார்கஸ் ஹாரிஸ் 8வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது பும்ரா வீசிய பவுன்சர் அவரது ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. ஹெல்மெட்டில் அடி வாங்கிய உடன் கீழே சரிந்து விழுந்தார் ஹாரிஸ். பின்னர் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிந்தது.


Click it and Unblock the Notifications