For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus : அரைசதம் அடித்த கோலி, ரஹானே.. கைவிட்ட புஜாரா.. மீண்டு வரும் இந்தியா

Recommended Video

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது- வீடியோ

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை 326 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்களில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது.

முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுதுள்ளது. அடுத்து இந்தியா பேட்டிங் ஆடி வருகிறது.

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் மாற்றம்

முன்னதாக, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் அஸ்வின், ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹனுமா விஹாரியும், அஸ்வினுக்கு பதில் உமேஷ் யாதவும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அணிகளின் திட்டங்கள்

அணிகளின் திட்டங்கள்

பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்தியா அதற்கேற்ப திட்டமிட்டுள்ளது. அணியில் நான்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது இந்தியா. ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்து இருந்தாலும் முதல் டெஸ்டில் ஆடிய அதே அணியுடன் களம் கண்டுள்ளது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஹாரிஸ் மற்றும் பின்ச் நல்ல துவக்கம் அளித்தனர். ஆரோன் பின்ச், மார்கஸ் ஹாரிஸ், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் நிதான ஆட்டம் ஆடி முதல் நாள் முடிவில் 277 ரன்கள் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா சுதாரித்து ஆஸ்திரேலிய அணியின் பின் வரிசை வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இந்திய அணிக்கு முரளி விஜய் - ராகுல் இணை துவக்கம் அளித்தனர். முதல் போட்டியில் இருவரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அந்த குறையை இந்த போட்டியில் போக்குவார்கள் என பார்த்தால், இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். புஜாரா மிகவும் நிதானமாக ஆடினார். எனினும், 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி, ரஹானே அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 172 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்துள்ளது. கோலி 82, ரஹானே 51 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கின்றனர். இந்தியா 154 ரன்கள் பிந்தங்கி உள்ளது.

Story first published: Saturday, December 15, 2018, 17:46 [IST]
Other articles published on Dec 15, 2018
English summary
India vs Australia Second Test at Perth Day 2 Australia all out for 326 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+