For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus : பெர்த் டெஸ்ட்டில் இந்தியாவோட நிலைமை இப்படி பரிதாபமா போச்சே!!

Recommended Video

இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 243 ரன்கள் குவி\த்து இந்திய அணிக்கு 287 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலிய அணியில் ஹாரிஸ் 70, பின்ச் 50, மார்ஷ் 45, ட்ராவிஸ் ஹெட் 58, டிம் பெய்ன் 38 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது. இந்திய அணியில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்கள், பும்ரா, உமேஷ் யாதவ், ஹனுமா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் கோலி 123, ரஹானே 51 ரன்கள் எடுத்து இந்திய அணி 283 ரன்கள் எடுக்க உதவினர். மற்ற வீரர்கள் யாரும் ரன் குவிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் நாதன் லியோன் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஆஸி. இரண்டாம் இன்னிங்க்ஸ்

ஆஸி. இரண்டாம் இன்னிங்க்ஸ்

43 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது ஆஸ்திரேலியா. கவாஜா 72, கேப்டன் டிம் பெய்ன் 37 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்தாலும் அதை வைத்தே 243 ரன்கள் எடுத்தது ஆஸி. அணி. ஷமி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா 3, இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.

டிரா செய்வதும் கஷ்டம்

டிரா செய்வதும் கஷ்டம்

நான்காம் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்தியா பேட்டிங்கை துவக்கியது. ராகுல் 0, புஜாரா 4, முரளி விஜய் 20, கோலி 17, ரஹானே 30 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பெர்த் ஆடுகளம் கடைசி நாட்களில் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்தியா 5 விக்கெட்கள் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ரிஷப் பண்ட், விஹாரி களத்தில் நிற்கின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை. நிச்சயம் இந்தியா வெற்றி பெறுவது கடினம். ஒருநாள் ஆட்டம் இன்னும் இருப்பதால் டிரா செய்வதும் கடினம்.

Story first published: Monday, December 17, 2018, 16:14 [IST]
Other articles published on Dec 17, 2018
English summary
India vs Australia Second Test Day 4 Australia set 287 runs as target for India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+