Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : 2வது டெஸ்டை எளிதாக வென்ற ஆஸி.. ஸ்பின்னர் இல்லாமல் ஆடிய இந்தியா தோல்வி

Recommended Video

2-வது டெஸ்டை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா- வீடியோ

பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 243 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 287 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. அதை எட்ட முடியாத இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹாரிஸ் 70, பின்ச் 50, மார்ஷ் 45, ட்ராவிஸ் ஹெட் 58, டிம் பெய்ன் 38 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்சை 326 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. இந்திய அணியில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்கள், பும்ரா, உமேஷ் யாதவ், ஹனுமா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் கோலி 123, ரஹானே 51 ரன்கள் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்கள் எடுக்க உதவினர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

ஆஸி. இரண்டாம் இன்னிங்க்ஸ்

ஆஸி. இரண்டாம் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது. கவாஜா 72, கேப்டன் டிம் பெய்ன் 37 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்தாலும் இறுதியில் 243 ரன்கள் எடுத்தது ஆஸி. அணி. இந்திய அணியில் ஷமி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா 3, இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்

287 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியது இந்தியா. நான்காம் நாள் முடிவில் இந்தியா 112 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்தது. ராகுல் 0, புஜாரா 4, முரளி விஜய் 20, கோலி 17, ரஹானே 30 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தில் தோல்வி

கடைசி நாள் ஆட்டத்தில் தோல்வி

ஐந்தாம் நாளில் 28 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்தியா கடைசி 5 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியாவின் தோல்விக்கு முழு நேர சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் ஆடியது தான் என கூறப்படுகிறது. பெர்த் ஆடுகளம் கடைசி 3 நாட்களில் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தமாக வீழ்ந்து விட்டனர். டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவில் இந்தியா - ஆஸி. இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளன.

Story first published: Tuesday, December 18, 2018, 9:45 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+