Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : என்னத்த சொல்றது? டிஆர்எஸ் ரிவ்யூவுக்கும் கோலிக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது!!

பெர்த்: இந்திய கேப்டன் கோலிக்கு டிஆர்எஸ் கேட்கவே தெரியாது என்ற பேச்சு உள்ளது. அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடை பெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியா திட்டம் என்ன?

இந்தியா திட்டம் என்ன?

இந்த போட்டிக்கு இந்திய நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்ற காரணத்தால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், அணியில் முழு நேர சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் கூட இல்லை. ஹனுமா விஹாரியை தான் இந்தியா சுழற்பந்துக்கு நம்பியுள்ளது.

ஷமி பந்துவீச வந்தார்

ஷமி பந்துவீச வந்தார்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி தடுமாறியது. அப்போது ஷமி பந்துவீச வந்தார். அவரது முதல் பந்து ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஆரோன் பின்ச்சின் பேடில் பட்டது. ஷமி உடனே விக்கெட் கேட்டார். அம்பயர் மறுத்தார்.

டிஆர்எஸ் கேட்ட கோலி

டிஆர்எஸ் கேட்ட கோலி

ஷமி கோலியை பார்க்க, கோலி சில வீரர்களுடன் பேசி விட்டு உடனே டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார். அந்த பந்து ஸ்டம்ப்புக்கு சில இன்ச்கள் மேலே சென்றது. அதனால், விக்கெட் மறுக்கப்பட்டது. இந்தியாவுக்கு முதல் டிஆர்எஸ் வீணானது.

அடுத்த பந்தில் என்ன ஆனது?

அடுத்த பந்தில் என்ன ஆனது?

ஷமியின் அடுத்த பந்திலும் மீண்டும் இதே நிலை ஏற்பட்டது. இப்போதும் பின்ச் பேடில் பந்து பட்டது. அம்பயர் மறுத்தார். ஷமி கோலியை பார்த்தார். ஆனால், இந்த முறை கோலி ரிவ்யூ கேட்கவில்லை. இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ரிவ்யூக்களை வீணாக்க வேண்டாம் என கோலி நினைத்திருக்கலாம். ஆனால், இந்த பந்தின் ரீ-ப்ளே பார்த்ததில் இந்த முறை பந்து ஸ்டம்ப்பை பதம் பார்ப்பது தெரிந்தது.

கோலி டிஆர்எஸ் சொதப்பல்

கோலி டிஆர்எஸ் சொதப்பல்

இந்திய அணி கேப்டன் கோலி கேட்கக்கூடாத ரிவ்யூவை கேட்டு, கேட்க வேண்டிய ரிவ்யூவை கேட்காமல் பயங்கர சொதப்பல் செய்துள்ளார். இது ஒரு தொடர் கதை தான். இன்னும் எத்தனை முறை கோலி இப்படி சொதப்புவாரோ?

Story first published: Friday, December 14, 2018, 15:58 [IST]
Other articles published on Dec 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+