Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு கெட்ட வார்த்தை திட்டு.. இந்தியர்களை குறித்து இனரீதியான கூச்சல்.. ஆஸி. ரசிகர்கள் அட்டகாசம்

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கேப்டன் கோலி, இந்திய ரசிகர்கள் மற்றும் குறிப்பிட்ட ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் சில ஆஸ்திரேலிய ரசிகர் கூட்டம் கூச்சல் போட்டு வருகிறது.

சீண்டும் ரசிகர்கள்

சீண்டும் ரசிகர்கள்

விராட் கோலியை ஒரு எதிரி போல, வில்லன் போல ஆஸ்திரேலிய ஊடகங்கள் சித்தரிப்பதாக ஒரு புகார் உள்ளது. அதே போல சில ரசிகர்களும் கோலியை சீண்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

கோலி வந்தால் கூச்சல்

கோலி வந்தால் கூச்சல்

கோலி பேட்டிங் செய்ய வரும் போது எரிச்சல் ஊட்டும் வகையில் சப்தம் எழுப்பும் அவர்கள், பீல்டிங் செய்யும் போது மோசமான கெட்ட வார்த்தைகளை கூறி வருகின்றனர். கோலி கடந்த வருடங்களில் இது போன்ற கூச்சல்களுக்கு எதிர்வினை ஆற்றி வந்தார். இந்த முறை அமைதி காத்து வருகிறார்.

மிட்ச் மார்ஷ்க்கும் இதே தான்

மிட்ச் மார்ஷ்க்கும் இதே தான்

குறிப்பாக பே 13 என்ற பகுதியில் இருக்கும் ரசிகர்கள் தான் இந்த வேலையை செய்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. அதே போல, மிட்ச் மார்ஷ் களத்திற்கு வரும் போதும், போகும் போதும் ஒரு கும்பல் சப்தம் எழுப்பி அவரை கலாய்த்து வருகிறது.

கடந்த கால அனுபவம்

கடந்த கால அனுபவம்

ஆஸ்திரேலிய ரசிகர்களில் ஒரு குறிப்பிட்ட அளவு இப்படி தான் மோசமாக நடந்து கொள்வார்கள் என பலரும் தங்கள் அனுபவத்தில் கூறி உள்ளனர். இந்திய வீரர் ராகுல், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூட சமீபத்தில் இது பற்றி பேசிய போது தங்கள் கடந்த கால அனுபவத்தை கூறி இருந்தனர்.

விசா எங்கே?

விசா எங்கே?

இந்த பே 13 ரசிகர்கள் வீரர்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களை நோக்கி "உங்க விசாவை காட்டுங்க" என கூச்சல் போட்டு வருகிறார்கள். அதாவது, விசா இல்லாமல் அகதிகளாகவோ, அத்துமீறி நுழைந்ததாகவோ பொருள் கொள்ளும் வகையில் இப்படி கூச்சல் போட்டு வருகின்றனர். இது இன ரீதியான தாக்குதல் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இதில் தலையிட்டுள்ளது.

எச்சரிக்கை செய்த நிர்வாகம்

எச்சரிக்கை செய்த நிர்வாகம்

நிலைமை எல்லை மீறி போவதை கண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ரசிகர்களை எச்சரித்துள்ளது. மேலும், அவர்கள் இன ரீதியாக தாக்கி கூச்சல் போட்ட வீடியோ காட்சிகளை காவல்துறை வசம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளது. அப்படியாவது அந்த ரசிகர்கள் அடங்குவார்களா என பார்க்கலாம்.

Story first published: Friday, December 28, 2018, 16:24 [IST]
Other articles published on Dec 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+