Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: யார் இந்த தன்வீர் சங்கா? இந்திய வம்சாவளி வீரரை இறக்கிய ஆஸ்திரேலியா.. என்ன திட்டம்?

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய வம்சாவளி வீரர் தன்வீர் சங்காவை களம் இறக்கி உள்ளது. அவர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஏழு சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

அவர் லெக் பிரேக் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுவதால், அங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணி தன்வீர் சங்காவை விளையாட வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனை நீக்கிவிட்டு தன்வீர் சங்கா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.

IND vs AUS Champions Trophy 2025 India 2025

இவர் இந்திய வம்சாவளி வீரராக இருக்கும் நிலையில், எப்படி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுகிறார் என்பது பற்றி பார்க்கலாம். இவரது பெற்றோர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். தன்வீர் சங்காவின் பெற்றோர் பஞ்சாபில் உள்ள ஜலந்தர் நகரத்தை சேர்ந்தவர்கள். அவரது தாய் கணக்காளராக பணிபுரிகிறார். அவரது தந்தை கனரக வாகன ஓட்டுனர் ஆவார்.

தனது மகனின் கிரிக்கெட் கனவு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் பெற்றோர் கடும் முயற்சியை எடுத்தனர். பின்னர் தன்வீர் சங்கா ஆஸ்திரேலியாவின் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மிகவும் போராடி அவர் அண்டர் 19 ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்தார். அவருக்கு பெரிய அளவில் புகழைத் தேடித் தந்தது பிக் பாஷ் லீக் டி20 தொடர் தான்.

2020 ஆம் ஆண்டு அண்டர்-19 உலக கோப்பையில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தினார் தன்வீர் சங்கா. அதை தொடர்ந்து பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடினார். அந்த முதல் சீசனில் அவர் 21 விக்கெட் வீழ்த்தி அந்த தொடரிலேயே மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார்.

அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே 31 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் அதே சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அவர் ஆஸ்திரேலியா அணியில் அவ்வப்போது மாற்று சுழற் பந்துவீச்சாளராக மட்டுமே வாய்ப்பு பெற்று வருகிறார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணிக்கு எதிராகவே அவரை களமிறக்கி உள்ளது ஆஸ்திரேலியா.

Story first published: Tuesday, March 4, 2025, 15:08 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+