Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லும் ஆடுவோம்... ஆஸ்திரேலியா தொடருக்கும் தயாரா இருப்போம்

டெல்லி : ஐபிஎல்லில் மும்முரமாக இந்திய அணியினர் விளையாடி வருகின்றனர். தினந்தோறும் பரபரப்பான போட்டிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

ஐபிஎல்லை முடித்துக் கொண்டு இந்திய அணியினர் நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் வரும் நவம்பர் 27ம் தேதி இந்த தொடர் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 4ம் தேதி ஒருநாள் தொடரும் 17ம் தேதி டெஸ்ட் தொடரும் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

கொரோனா காரணமாக யூஏஇயில் ஐபிஎல்லின் இந்த சீசனின் போட்டிகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு அணியும் 4 முதல் 5 போட்டிகளில் தற்போதுவரை விளையாடியுள்ளன. புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அடுத்த வாரத்தில் அணி அறிவிப்பு

அடுத்த வாரத்தில் அணி அறிவிப்பு

இந்த போட்டிகள் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையடுத்து இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கு இடையில் 15 நாட்கள் மட்டுமே இடைவெளி காணப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27ம் தேதி டி20 துவக்கம்

27ம் தேதி டி20 துவக்கம்

அடுத்த மாதம் 27ம் தேதி இந்த தொடர் டி20 போட்டிகளுடன் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ளது. ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியினர் அங்கு குவாரன்டைனை முடித்துக் கொண்டு இதில் விளையாடுகின்றனர்.

டிசம்பர் 17ல் டெஸ்ட் தொடர்

டிசம்பர் 17ல் டெஸ்ட் தொடர்

முதலில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியினர் அதையடுத்து வரும் டிசம்பர் 4ம் தேதி துவங்கும் ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து டிசம்பர் 17ம் தேதி துவங்கும் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணியினருடன் மோதவுள்ளனர்.

Story first published: Tuesday, October 6, 2020, 19:22 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+