Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசி. ஒருநாள் தொடரில் இடம் பிடித்த ப்ரித்வி ஷா கூட்டாளி.. யார் இந்த ஷுப்மன் கில்?

மும்பை : இந்திய ஒருநாள் அணியில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அண்டர் 19 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அடுத்து நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

ராகுல் - பண்டியா இருவரும் பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக எழுந்த புகாரில் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஷுப்மன் கில் - விஜய் ஷங்கர் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்து தொடரில் ஷுப்மன்

நியூசிலாந்து தொடரில் ஷுப்மன்

விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்தே அணியில் இடம் பெற உள்ளார். ஷுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் இருந்து மட்டுமே இந்திய அணியில் இணைய உள்ளார். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்காக நியூசிலாந்தில் ஆடியிருந்தார் ஷுப்மன்.

அண்டர் 19 அசத்தல்

அண்டர் 19 அசத்தல்

ஷுப்மன் கில் அண்டர் 19 உலகக்கோப்பையில் ப்ரித்வி ஷா தலைமையில் ஆடியவர். அந்த தொடரில் 372 ரன்கள் அடித்தார் கில். அதன் சராசரி 124 ஆகும். அப்போதிருந்தே ஷுப்மன் கில் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சக வீரர்கள் ப்ரித்வி, ஷிவம்

சக வீரர்கள் ப்ரித்வி, ஷிவம்

ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகிய மூன்று அண்டர் 19 உலகக்கோப்பை அணி வீரர்களும் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிப்பார்கள் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இவர்களில் ப்ரித்வி ஷா டெஸ்ட் அணியிலும், ஷிவம் மாவி ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கும் ஏலம் போனார்.

மாயன்க் அகர்வாலின் வாய்ப்பு

மாயன்க் அகர்வாலின் வாய்ப்பு

ஷுப்மன் கில் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று இருந்தார். தற்போது, இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இடம் பெற்று இருந்த மாயன்க் அகர்வால், ராகுல் - பண்டியா நீக்கத்திற்கு பின் ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு காயம் இருந்ததால், ஷுப்மன் கில் வாய்ப்பு பெற்றார்.

Story first published: Monday, January 14, 2019, 15:14 [IST]
Other articles published on Jan 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+