For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன்பா இப்படி பண்றீங்க! ஆஸி. அணிக்கு ரன்களை வாரி இறைத்து வெற்றி பெற வைத்த 2 இந்திய பௌலர்கள்!

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்தது.

இரண்டாவது போட்டியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக சித்தார்த் கௌல் மற்றும் சாஹல் மிக மோசமாக பந்து வீசினர்.

பேட்டிங் அபாரம்

பேட்டிங் அபாரம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக ரன் குவித்து 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராகுல் 47, கோலி 72*, தோனி 40 ரன்கள் எடுத்து இருந்தனர். இதனால், இந்தியா வெற்றி பெற்று விடும் என்ற எண்ணமே முதலில் இருந்தது.

வெற்றி பறிபோனது

வெற்றி பறிபோனது

முதல் போட்டியில் பேட்டிங் சொதப்பியதால் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் அதிக ரன் குவித்ததால், எப்படியும் இந்தியா வென்று விடும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கியது இந்திய பந்துவீச்சு.

5 பந்துவீச்சாளர்கள்

5 பந்துவீச்சாளர்கள்

கேப்டன் கோலி வழக்கம் போல இந்த போட்டியிலும் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கினார். அதில் விஜய் ஷங்கர், க்ருனால் பண்டியா இருவரும் ஆல்-ரவுண்டர்கள். மற்ற மூவர் பும்ரா, சாஹல் மற்றும் சித்தார்த் கௌல்.

வாரி இறைத்தனர்

வாரி இறைத்தனர்

இவர்களில் சாஹல் மற்றும் சித்தார்த் கௌல் ஓவருக்கு 11.75 மற்றும் 12.27 ரன்கள் கொடுத்து வாரி இறைத்தனர். இவர்கள் இருவரது பந்துவீச்சிலும் தலா 3 சிக்ஸர்கள் அடித்தார் ஆஸ்திரேலிய வீரர் மாக்ஸ்வெல்.

கடைசி ஓவர் சொதப்பல்

கடைசி ஓவர் சொதப்பல்

இவர்களில் கடைசி ஓவரை வீசினார் சித்தார்த். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் கொடுத்தார் சித்தார்த் கௌல். இப்படி சித்தார்த் கௌல் மற்றும் சாஹல் ரன்களை வாரிக் கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

மற்ற பந்துவீச்சாளர்கள்

மற்ற பந்துவீச்சாளர்கள்

சித்தார்த் கௌல், சாஹல் - இருவர் தவிர மற்ற வீரர்கள் ஓரளவு பந்து வீசினர். விஜய் ஷங்கர் 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். பும்ரா, க்ருனால் விக்கெட் எடுக்காவிட்டாலும், 4 ஓவர்களில் 30 மற்றும் 33 ரன்கள் கொடுத்தனர்.

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

இந்தியா எப்போதும் கூடுதல் பந்துவீச்சாளர் கொண்டு களமிறங்குவதும், பரிசோதனை முயற்சிகளை நிறுத்துவதும் தான் இது போன்ற தோல்விகளுக்கு தீர்வாகும்.

Story first published: Thursday, February 28, 2019, 11:20 [IST]
Other articles published on Feb 28, 2019
English summary
India vs Australia : Siddarth Kaul and Chahal failed to control runs in 2nd T20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+