Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு இடம் காலியா இருக்கு.. இடத்தை பிடிக்கப் போவது தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்-ஆ?

டெல்லி : தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அம்பதி ராயுடு சரியாக ரன் குவிக்கவில்லை.

இதனால், நான்காவது போட்டியில் தன் வாய்ப்பை இழந்தார் ராயுடு. உலகக்கோப்பை அணியில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய சரியான வீரர் அம்பதி ராயுடு தான் என கூறப்பட்டது.

ஊசலாட்டம்

ஊசலாட்டம்

ஆனால், இப்போது அவரது நிலையும் ஊசலாட்டத்தில் இருப்பதால், யார் தான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

கங்குலி கூறுகையில், "நான்காவது இடத்திற்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. என்ன நடக்கிறது என பார்ப்போம்" என தெரிவித்தார். கங்குலி கூறியதன் அடிப்படையில் வேறு எந்த வீரர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்குவார்?

மாற்றாக ராகுல்

மாற்றாக ராகுல்

நான்காவது போட்டியில் ராகுல், ராயுடுவுக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றார், ஆனால், அவர் மூன்றாம் இடத்தில் களமிறங்க, கோலி நான்காம் இடத்தில் பேட்டிங் செய்து, 7 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

கோலி வேண்டாம்

கோலி வேண்டாம்

எனவே, கோலி நிச்சயம் 4வது இடத்தில் பேட்டிங் செய்யாமல் இருப்பதே அணிக்கு நல்லது. ராகுல் துவக்க வீரர்களுக்கு மாற்று வீரர் எனும், நிலையில், அவர் அந்த இடத்தை விட்டு வந்தால், குழப்பம் ஏற்படும்.

இரு வாய்ப்பு

இரு வாய்ப்பு

இந்த நிலையில், அடுத்த வாய்ப்பாக இருப்பது இருவர் மட்டுமே. ஒருவர் ரிஷப் பண்ட். மற்றொருவர் தினேஷ் கார்த்திக். இவர்கள் இருவருமே உலகக்கோப்பை பந்தயத்தில் அணியில் இடம் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

நேரம் இல்லை!

நேரம் இல்லை!

இவர்களில், ஒருவருக்கு நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கலாம். ஆனால், அதை பரிசோதித்து பார்க்க நேரம் இல்லை. வேண்டுமானால், ரிஷப் பண்ட்டை ஐந்தாம் போட்டியில் அந்த இடத்தில் களமிறக்கி ஆட வைக்கலாம்.

ஒரே வாய்ப்பு

ஒரே வாய்ப்பு

ஒருவேளை, ரிஷப் பண்ட் சரி வரவில்லை என்றால் நேரடியாக தினேஷ் கார்த்திக் தான் ஒரே வாய்ப்பு. ஐபிஎல் தொடர் தான் நான்காவது இடத்தில் யார் பேட்டிங் செய்ய உள்ளார்கள் என்பது குறித்து பதில் அளிக்கும் களமாக இருக்கும் என்பதே தற்போதைய நிலை.

Story first published: Tuesday, March 12, 2019, 18:51 [IST]
Other articles published on Mar 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+