Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

46 டி20 இன்னிங்சில் இது தான் முதல் முறை.. சூர்யகுமாருக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தும் காத்திருக்கு?

பெங்களூரு : உலக கிரிக்கெட்டிலே டி20 யை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது இந்தியாவை சேர்ந்த சூரிய குமார் யாதவ் தான். ஏபி டிவில்லியர்ஸ் பிறகு 360 டிகிரி கோணத்தில் எப்படி பந்து வீசினாலும் அடிப்பேன் என்ற பாணியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் இருக்கும்.

மேலும் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை வகித்து வருகிறார். அந்த அளவுக்கு சூரியகுமார் யாதவ் அபாரமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

India vs australia - Suryakumar yadav first time got out for single digit score for consecutive innings

இந்த நிலையில் தன்னுடைய முதல் தொடரிலே கேப்டனாக களம் இறங்கி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறார். இந்த தொடர் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் நன்றாகவே தொடங்கினார். முதல் டி20 போட்டியில் 80 ரன்களும் இரண்டாவது t20 போட்டியில் 19 ரன்களும் மூன்றாவது t20 போட்டியில் 39 ரன்களும் சூரியகுமார் விளாசி பட்டையை கிளப்பினார்.

எனினும் நான்காவது டி20 போட்டியில் அவர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் பெங்களூருவில் நடைபெறுவதால் ரன் குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில் சூரிய குமார் ஆஸ்திரேலியாவை பொளப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் யாருமே எதிர்பாராத வகையில் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் சூரிய குமாரியாதவ் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறையாகும். சூரியகுமார் கேப்டன்ஷி சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் அவருக்கு தென்னாப்பிரிக்க தொடரிலும் கேப்டனாக செயல்பட பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் திறமையை அவர் அதிகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸில் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது தனிப்பட்ட அளவில் அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இன்னும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சூரியகுமார் யாதவும் தன்னுடைய பழைய பார்மை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் கேப்டன்ஷிப் ஆல் அவருடைய பேட்டிங் திறமை பாதிக்கப்படுகிறது என பிசிசிஐ அவரை பதவியில் இருந்து தூக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Sunday, December 3, 2023, 23:17 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+