Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தம்பி.. இங்க வா”.. பயிற்சியின் போதே சுப்மன் கில்லுக்கு “சிறப்பு கவனிப்பு” செய்த கோச் கம்பீர்

கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனான சுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ரன் குவிக்கத் திணறி வரும் அவருக்கு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் "சிறப்பு கவனிப்பை" செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 தொடரின் நான்காவது போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சி செய்தது. அப்போது பயிற்சியின் பாதியில் சுப்மன் கில்லை தனியாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் தீவிரமாக பேசினார் கௌதம் கம்பீர். இதற்கு முந்தைய காலங்களிலும் சரியாக ரன் குவிக்காத வீரர்களை கம்பீர் தனியாக அழைத்துச் சென்று சிறப்பு கவனிப்பு செய்தது உண்டு. கில்லுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

India vs Australia T20 Coach Gautam Gambhir Takes Shubman Gill Aside for Crucial Advice Mid-Practice

கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பையில் டி20 அணிக்குத் திரும்பிய 25 வயதான சுப்மன் கில், அதன்பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.

இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக, கோல்ட் கோஸ்டில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அணி வீரர்கள் பயிற்சிக்காக மைதானத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது, சுப்மன் கில்லை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அவருடன் நீண்ட நேரம் தீவிரமாக உரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடரும் ரன் வறட்சி:

சுப்மன் கில்லின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் கவலையளிப்பதாக உள்ளன. டி20 அணிக்குத் திரும்பிய பிறகு, அவர் விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் வெறும் 184 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 23 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 146 ஆகவும் உள்ளது. இதில் அதிகபட்சமாக 47 ரன்களையே எடுத்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகளில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடப்பு டி20 தொடரில் அவரது ஸ்கோர்கள் முறையே 37 (நாட் அவுட்), 5, மற்றும் 15* என உள்ளன. கான்பெராவில் நடந்த முதல் போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து நன்றாக ஆடியபோதும், அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

சுப்மன் கில் இதுவரை 31 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 762 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 28.22 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 140.85 ஆகவும் உள்ளது.

தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால், நான்காவது டி20 போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் சுப்மன் கில் உள்ளார். தலைமைப் பயிற்சியாளர் கம்பீரின் இந்தத் தனிப்பட்ட உரையாடல் மற்றும் ஆலோசனைகள், சுப்மன் கில்லுக்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுத்து, அவர் மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப உதவும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Thursday, November 6, 2025, 10:09 [IST]
Other articles published on Nov 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+