Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ஆஸி.யிடம் உதை வாங்குவது உறுதி.. இந்திய டி20 அணியில் அவ்வளவு குறை.. வெல்வது கடினம்?

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை அதே ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை பழிவாங்கி ரசிகர்களுக்கு இந்திய அணி ஆறுதல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு குழு அறிவித்திருக்கும் இந்த அணியை பார்த்தால் நிச்சயம் மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவிடம் உதை வாங்கப் போவது உறுதி என தெரிகிறது.

India vs australia t20 series - Big Minus in india squad will make aussies happy

ஏனென்றால் இந்த அணியில் மிகப்பெரிய ஒரு குறை இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலியா அணி என்பது பேட்டிங் பவர் ஹவுஸ் நிறைந்த அணியாகும். அதுவும் டி20 போட்டியில் அவர்கள் பவர் ரேஞ்சர்ஸ் வகையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளும் போது அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை முடிந்த உடன் இந்த தொடர் நடைபெறுவதால் இந்த ஓய்வு முக்கியம் தான் என்றாலும் புவனேஸ்வர் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இன்னும் விளையாடி கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை தேர்வு குழு பரிசீலனையே செய்யவில்லை. ஆர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார் என 4 வேகப்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியா அணியிடம் அடி வாங்க ரெடிமேடாக தயார் செய்யப்பட்ட பந்துவீச்சாளர்களை தேர்வு குழு அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த நான்கு வீரர்களின் திறமை பற்றி கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை .ஆனால் இவர்கள் ஆஸ்திரேலியா போன்ற அணியிடம் எப்படி விளையாட போகிறார்கள் என்பதுதான் கவலையே. போதிய அனுபவம் இல்லாததால் இந்த வீரர்களின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய சிதற அடிக்கப் போவது உறுதி என்று ரசிகர்கள் இப்போதே கிண்டல் அடிக்க தொடங்கி விட்டார்கள்.

சுழற் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், அக்சர்பட்டேல், ரவி பிஸ்னாய் என்ற மூன்று வீரர்கள் இருக்கின்றனர்.ஆனால் அதிலும் அனுபவம் நிறைந்த சாகலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதன் மூலம் இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நகர்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

Story first published: Tuesday, November 21, 2023, 7:35 [IST]
Other articles published on Nov 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+