
இந்திய அணி
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்கள் மட்டுமே உள்ளன. எனவே ஆஸ்திரேலிய களத்திற்கு ஏற்றவாறு பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வதை போன்றே இந்த இரண்டு தொடர்களிலும் செய்யவுள்ளனர்.

பயிற்சி வீடியோ
இந்நிலையில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் ஆகியோர் தங்களது பேட்டிங் ஸ்டலைலில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளனர். பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சார்பில் பயிற்சி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விராட் கோலி ஆக்ரோஷமே இல்லாமல் விளையாடி வருகிறார். அதாவது பழைய ஸ்டைலில் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு, கிளாசிக் ஷாட்களை ஆடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

என்ன காரணம்
ஆஸ்திரேலிய களத்தில் வேகமும், பவுன்ஸும் அதிகம் இருக்கும். ஒருவேளை விரைவாக ஓப்பனிங் ஜோடி பிரிந்தால், கோலி தூண் போல நிலைத்து நின்று விளையாட வேண்டும். எனவே அவர் தூக்கி அடிப்பதற்காக பயிற்சி பெறாமல், தரையோடு விளையாடுவதற்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சூர்யகுமாரின் அதிரடி
இதற்கு நேர் மாறாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். சமீப காலமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார், வேகம் மற்றும் பவுன்ஸ் நிறைய களங்களை எதிர்கொள்வது பிடிக்கும் எனக் கூறியிருந்தார். எனவே வேகமாக வரும் பந்துகளை சுலபமாக சிக்ஸருக்கு விரட்டுவதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதுவும் முதல் பந்து முதலே அதிரடி காட்டுகிறார் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications